Tamil Cinema News
கேம் சேஞ்சராக மாறிய சிசிடிவி காட்சிகள்.. அல்லு அர்ஜுன் பெயரோடு இணைந்த இன்னும் இரண்டு குற்றவாளிகள்..!
கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான புஷ்பா 2 திரைப்பாம் ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் வெளியானது. அப்போது அங்கு படம் பார்க்க வந்த ரேவதி மற்றும் அவரது 8 வயது மகன் ஸ்ரீ தேஜ் இருவரும் அல்லுஅர்ஜுன் ரசிகர்களின் கூட்டத்தில் சிக்கி தாக்கப்பட்டனர்.
இதனை தொடர்ந்து ரேவதி அங்கேயே உயிரிழந்தார். ஸ்ரீ தேஜ் இன்னமும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்து வருகிறார். இதுக்குறித்து அல்லு அர்ஜுன் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த உயிரிழப்புக்கு அல்லு அர்ஜுன் தான் முக்கிய காரணம் என கூறப்பட்டது.
இந்த நிலையில் கைதான அல்லு அர்ஜுன் அவரது செல்வாக்கை பயன்படுத்தி அடுத்த சில மணி நேரங்களிலேயே வெளியே வந்துவிட்டார். இந்த நிலையில் தெலுங்கானா முதல்வரில் துவங்கி பலரும் அல்லு அர்ஜுனை விமர்சிக்க துவங்கினர்.
சிலர் அல்லு அர்ஜுன் வீட்டிற்கு கல் வீச்சு எல்லாம் நிகழ்த்தினர். இந்த நிலையில் வெளியான சில சிசிடிவி காட்சிகள் ஆட்டத்தையே மாற்றியுள்ளன. அதாவது அல்லு அர்ஜுன் வருவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பே கூட்டம் அலைமோதிக்கொண்டு சென்றுள்ளது.
அப்போது திரையரங்க செக்யூரிட்டிகள் பலரையும் தாக்கியுள்ளனர். அந்த கூட்டத்தில் சிக்கிதான் ரேவதி உயிரிழந்துள்ளார். இது குறித்து காவலர்கள் கூறும்போது ஏற்கனவே கூட்டமாக இருக்கிறது என அல்லு அர்ஜூனை வர வேண்டாம் என நாங்கள் கூறினோம்.
ஆனாலும் அவர் வருவதாக கூறினார். அவர் வருவதை அறிந்தவுடன்தான் கூட்டம் ஆக்ரோஷமாக மாறியது. அந்த விஷயத்தை அறிந்து ஓடி வந்த கூட்டத்தில்தான் ரேவதி சிக்கிக்கொண்டார். திரையரங்க அலுவலர்களும் மக்களை சரியாக நிர்வகிக்கவில்லை என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
எனவே இந்த வழக்கில் அல்லு அர்ஜுனோடு சேர்த்து திரையரங்க உரிமையாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளது.
