Tamil Cinema News
அல்லு அர்ஜுன் மேல தப்பு இல்லன்னு சொல்றீங்களே..? புட்டு புட்டு வைத்த தெலுங்கானா முதல்வர்.. நிஜ புஷ்பா 2 தொடங்குது போல…
பேன் இந்தியா நட்சத்திரமாக தற்சமயம் இந்திய அளவில் பிரபலமடைந்தவர் நடிகர் அல்லு அர்ஜுன். என்னதான் பேன் இந்தியா நடிகராக இருந்தாலுமே கூட இப்பொழுது அவரைக் குறித்து எதிர்மறையான விமர்சனங்கள் தான் சினிமா வட்டாரத்திலும் மக்கள் மத்தியிலும் இருந்து வருகிறது.
நடிகர் அல்லு அர்ஜுன் புஷ்பா திரைப்படத்தின் முதல் நாள் ரிலீஸின்போது ஒரு திரையரங்கிற்கு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக வந்திருந்தார்.
அப்படி அவர் வரும்பொழுது கூடிய கூட்டத்தின் காரணமாக ஒரு பெண்ணும் அவரது மகனும் பாதிக்கப்பட்டார்கள். அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். அவரது மகன் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார்.
இந்த நிலையில் இந்த பிரச்சனைக்கு காரணம் அல்லு அர்ஜுன் தான் என்று கூறி அல்லு அர்ஜுனை கைது செய்தனர் ஆனால் கைது செய்யப்பட்ட 8 மணி நேரத்திற்குள்ளாகவே பெயில் வாங்கி வெளியே வந்து விட்டார் அல்லு அர்ஜுன்.
அல்லு அர்ஜுன் செய்த தவறு:
இந்த நிலையில் இதுகுறித்து தற்சமயம் கேள்விகளை கேட்க துவங்கியிருக்கிறார் தெலுங்கானா முதல்வர். அதில் அவர் கேட்கும் பொழுது சிறை வாசலையே மிதிக்காத அல்லு அர்ஜுன் வீட்டிற்கு சென்றதும் அவரை பார்ப்பதற்கு திரை பிரபலங்கள் எல்லாம் ஒரு கூட்டமாக சென்றனர்.
ஆனால் அவர்கள் யாரும் பாதிக்கப்பட்ட சிறுவனை பார்ப்பதற்கு செல்லவில்லை ஏன்? மேலும் இந்த தவறு நடப்பதற்கு அவர்தான் காரணம் திரையரங்கிற்கு அல்லு அர்ஜுன் சொல்லாமல் கொள்ளாமல் வந்ததே முதலில் பெரிய தவறு.
அதே போல இந்த பிரச்சனை நடந்த பிறகும் கூட அல்லு அர்ஜுன் திரையரங்கிற்குள் சென்று படத்தை பார்த்து இருக்கிறார் அவரிடம் பிரச்சனையாகிவிட்டது என்று கூறி வெளியேறும்படி காவலர்கள் கூறியும் கூட வெளியேறாமல் படத்தை பார்த்து இருக்கிறார் என்று அவர் மீது குற்றம் சாட்டினார் முதல்வர்.
இதற்கு பதில் அளித்த அல்லு அர்ஜுன் தன்னுடைய புகழுக்கு கலங்கத்தை ஏற்படுத்துவதற்கான வேலைகளை செய்கிறார்கள் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் முதல்வருக்கும் அல்லு அர்ஜுனுக்கும் நேரடியாக பிரச்சனைகள் துவங்கியிருப்பது தருகிறது புஷ்பா 2 திரைப்படத்தின் கதைக்களம் போலவே உண்மையில் நடந்து வருகிறதே என்று இது குறித்து ரசிகர்கள் பேசி வருகின்றனர்.