Tamil Cinema News
ஆறாவது நாள் சரிந்த புஷ்பா வசூல்..! இதுதான் காரணமா?..
நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி அதிக வெற்றியை பெற்று வரும் திரைப்படமாக புஷ்பா திரைப்படம் இருந்து வருகிறது. புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகம் வெளியான பொழுது அந்த படத்திற்கு எக்கச்சக்கமான வரவேற்புகள் கிடைத்தன.
அதனை தொடர்ந்து இந்த படம் கண்டிப்பாக பெரும் வெற்றியை தரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதை போலவே முதல் பாகமே ஆயிரம் கோடியை தாண்டி பெரிய வசூலை பெற்று கொடுத்தது. அதனை தொடர்ந்து புஷ்பா 2 திரைப்படத்திற்கான வரவேற்பு என்பது அதிகரித்தது.
இந்த நிலையில் புஷ்பா 2 திரைப்படம் முதல் பாகத்தை விட அதிக பிரம்மாண்டத்தோடு எடுக்கப்பட்டது. தற்சமயம் வெளியான புஷ்பா 2 திரைப்படம் வெறும் ஐந்தே நாட்களில் 900 கோடியை தாண்டி வசூல் சாதனை செய்திருப்பது பலருக்குமே ஆச்சரியத்தை கொடுத்து இருக்கிறது.
ஆறாவது நாள் வசூல்:
மேலும் புஷ்பா 2 வெளியான இந்த சமயத்தில் தென்னிந்திய சினிமாவில் தமிழ் கன்னடம் மலையாளம் தெலுங்கு என்று நான்கு மொழிகளிலும் வேறு எந்த பெரிய நடிகர்களின் படங்களும் வெளியாகவில்லை. இது புஷ்பா திரைப்படத்திற்கு அதிக திரையரங்குகள் கிடைப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது.
இதனால் கூட படத்தின் வசூல் இவ்வளவு சீக்கிரத்தில் அதிகரித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் 5 நாட்கள் வரிசையாக அதிக வசூலை கொடுத்து வந்த புஷ்பா திரைப்படம் ஆறாவது நாள் வசூல் குறைந்து இருக்கிறது.
ஆறாவது நாள் வெறும் 35 கோடி தான் வசூல் செய்துள்ளது புஷ்பா திரைப்படம். இப்படி குறைந்தாலும் கூட 1500 கோடி வரை இந்த படம் வசூல் செய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்படுகிறது.
