Cinema History
அந்த விஷயத்துல அம்மா ரொம்ப மோசம்.. விஜயகாந்த் பட நடிகை ஓப்பன் டாக்!..
தமிழ் சினிமாவில் நிறைய நடிகைகளை அறிமுகப்படுத்தியதில் பாரதிராஜா மற்றும் பாலச்சந்தருக்கு முக்கிய பங்கு உண்டு. இவர்கள் இருவருமே நிறைய நடிகர் நடிகைகளை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தி அவர்களை பிரபலப்படுத்தியும் இருக்கின்றனர்.
நடிகை ரேவதி சுகன்யா மாதிரியான நிறைய நடிகைகள் இவர்கள் இருவரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் தான். அப்படியாக புது நெல்லு புது நாத்து திரைப்படம் மூலமாக அறிமுகமானவர்தான் நடிகை ருத்ரா.
புது நெல்லு புது நாத்து திரைப்படத்திற்கு பிறகு நிறைய திரைப்படங்களில் நடித்தார் ருத்ரா. அதில் அவருக்கு அதிக பிரபலத்தை பெற்று கொடுத்தது விஜயகாந்த் நடித்த கள்ளழகர் திரைப்படம்.
2007 ஆம் ஆண்டு ஓரம் போ என்கிற திரைப்படத்தில் நடித்தார் ருத்ரா. அதற்குப் பிறகு பெரிதாக திரைப்படங்களில் நடிக்கவில்லை. இந்த நிலையில் ஒரு பேட்டியில் தனது ஆரம்ப கால சினிமா வாழ்க்கை குறித்து அவர் கூறியிருக்கிறார்.
அதில் அவர் கூறும் பொழுது மிக சிறு வயதிலேயே சினிமாவிற்கு நடிக்க வந்துவிட்டேன். அதனால் எனக்கு 20 வயது ஆகும் வரையில் கூட எல்லா படப்பிடிப்புக்கும் எனது அம்மாவும் கூட வருவார். எப்போதுமே பாதுகாப்பாக என்னை பார்த்துக் கொள்வார்.
அதே சமயம் நான் நடிப்பது நன்றாக இருக்கா? இல்லையா? என்று வெளிப்படையாகவே கூறிவிடுவார். ஒருவேளை நான் நடிப்பது நன்றாக இல்லை என்றால் என்னை திட்டுவார். அதனால் எனது அம்மாவின் மூலமாகதான் மிக நன்றாக நடிக்க கத்துக் கொண்டேன் என்று கூறியிருக்கிறார் ருத்ரா.
