Tamil Cinema News
லைவில் வந்து தாய்பால் கொடுத்த ரஜினி பட நடிகை.. வர வர ரொம்ப ஓவரா போகுதே..!
சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகைகளில் சில நடிகைகள் மட்டும் எப்போதும் சர்ச்சையை ஏற்படுத்தி வருவதுண்டு. முன்பு எல்லாம் சினிமாவில் பிரபலம் அடைந்தவர்கள் தொடர்ந்து மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பதற்குதான் சமூக வலைதளங்களை பயன்படுத்தி வந்தனர்.
ஆனால் இப்பொழுது இருக்கும் நடிகைகள் எல்லாம் தொடர்ந்து சர்ச்சையை கிளப்புவதற்காகவே சமூக வலைதளங்களை பயன்படுத்தும் ஒரு முறை இருந்து வருகிறது. இப்படியாக சர்ச்சையை கிளப்பி வரும் நடிகைகளில் நடிகை ராதிகா ஆப்தே முக்கியமானவர்.
ராதிகா ஆப்தே கபாலி திரைப்படம் மூலமாக தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஆவார். ஆனால் கபாலி திரைப்படத்திற்கும் முன்பே அவர் ஆல் இன் ஆல் அழகுராஜா திரைப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
ராதிகா அப்தே:
ஆனால் கபாலி திரைப்படம்தான் தமிழ் மக்கள் மத்தியில் அவருக்கு பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. 39 வயதாகும் ராதிகா ஆப்தே தற்சமயம் பெண் குழந்தையை பெற்று எடுத்திருக்கிறார் அவர்கள் குழந்தை பிறப்பதற்கு முன்பிருந்தே நிறைய புகைப்படங்களை அவர் வெளியிட்டு வந்தார்.
கர்ப்ப காலங்களில் தொடர்ந்து கர்ப்பமாக இருப்பதையே கவர்ச்சியான புகைப்படமாக இவர் வெளியிட்டு வந்தார் அந்த புகைப்படங்களே அதிகமாக சர்ச்சைக்கு உள்ளானது எதற்காக ராதிகா ஆப்தே இப்படியெல்லாம் செய்கிறார் என்றெல்லாம் கூட கேள்விகள் கேட்டு வந்தனர் பொதுமக்கள்.
இந்த நிலையில் தற்சமயம் அவருக்கு குழந்தை பிறந்து இருக்கிறது அந்த குழந்தைக்கு பால் கொடுத்து கொண்டே வீடியோ கால் பேசும் ஒரு புகைப்படத்தை அவர் வெளியிட்டு இருக்கிறார் தற்சமயம் இந்த புகைப்படம் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.
