Tamil Cinema News
தங்கச்சியை வச்சி படம் பண்ணும்போது மணிரத்னம் செஞ்ச வேலை… குடும்பமே ஆடிபோயிட்டோம்.. உண்மையை உடைத்த ராதிகா..!
தமிழ் சினிமாவில் கிழக்கே போகும் ரயில் திரைப்படம் மூலமாக பிரபலமடைந்தவர் நடிகை ராதிகா. நடிகை ராதிகா கருப்பு நிறத்தில் இருந்தார் என்றாலும் கூட தனிப்பட்ட நடிப்புத் திறனை கொண்டவராக இருந்தார்.
அதனால்தான் அவர் எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் சிறப்பாக நடக்க கூடியவராக இருந்தார். இப்பொழுதும் சீரியல்களில் அவரால் நடிக்க முடிவதற்கு காரணம் அதுதான். இந்த நிலையில் ராதிகா சமீபத்தில் தன்னுடைய தங்கை நிரோஷா குறித்து பேட்டியில் பேசியிருந்தார்.
ராதிகாவின் தங்கைதான் நீரோஷா என்பது பலருமே அறியாத விஷயமாகும் நீரோஷா குறித்து ராதிகா பேட்டியில் கூறும் பொழுது நான் ஒரு நாள் குடும்ப புகைப்படங்களை பார்த்துக் கொண்டிருந்த பொழுது மணிரத்தினம் சார் என்னுடன் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்.
நீரோஷாவுக்கு வைத்த காட்சி:
அப்பொழுதுதான் அவர் நீரோஷாவின் புகைப்படத்தை பார்த்தார். யார் இந்த பெண் என்று கேட்டார். நான் எனது தங்கை என்று கூறினேன் பிறகு எனது குடும்பத்திடம் பேசி அவரது திரைப்படத்தில் நீரோஷாவை நடிக்க வைத்தார்.
அப்பொழுது அந்த திரைப்படத்தில் நீச்சல் உடை அணிந்து வருவது போன்ற காட்சி ஒன்று இருந்தது. அதை பார்த்து எங்கள் குடும்பமே அதிர்ச்சி அடைந்து விட்டது. ஏனெனில் குடும்பத்தில் யாருக்கும் நீரோஷா நடிப்பதில் பெரிதாக ஆர்வம் இருக்கவில்லை.
அப்படி இருக்கும் பொழுது இப்படியான காட்சி வைக்கப்பட்டிருந்தது அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் மணிரத்தினம் எங்களிடம் கூறும் பொழுது இந்த காட்சி நன்றாக வரும். இந்த பாடலை நான் முடித்த பிறகு உங்களுக்கு இந்த காட்சி பிடிக்கவில்லை என்றால் நான் அதை நீக்கிவிடுகிறேன் என்று கூறி காட்சிகளை எடுத்தார். ஆனால் அந்த பாடல் முடித்த பிறகு எனக்குமே அந்த காட்சி பிடித்திருந்தது என்று கூறியிருக்கிறார் நடிகை ராதிகா.