நடிகை ராதிகா கிழக்கே போகும் ரயில் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர். பல வருடங்களாகவே அவர் சினிமாவில் இருந்து வருகிறார்.
விஜய் சிறு வயது பிள்ளையாக இருக்கும் காலத்தில் இருந்து விஜய்யை பார்த்து வருபவர் நடிகை ராதிகா. நடிகை ராதிகாவும் அரசியலின் மீது ஆர்வம் கொண்டு அரசியல் கட்சி ஒன்றை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் நடிகர் விஜய் குறித்து சமீபத்தில் அவர் தனது பேட்டியில் பேசியிருந்தார். அதில் அவர் கூறும் பொழுது நடிகர் விஜய்யை நான் சிறு வயது முதலே பார்த்து வருகிறேன்.

அதிர்ச்சியடைந்த ராதிகா:
அவர் மிகவும் அமைதியான ஒரு நபர் அவரை சத்தமாக பேசி கூட நான் பார்த்தது கிடையாது. ஆனால் சமீபத்தில் நடந்த மாநாட்டில் அவர் பேசியது எனக்கே அதிர்ச்சியாக இருந்தது. நாம் பார்த்து வளர்ந்த விஜய் தானா இது என்கிற அளவிற்கு இருந்தது.
அவருடைய அரசியல் பயணத்திற்கு வாழ்த்துக்கள் விஜயின் அரசியல் கொடியில் எங்கள் கட்சியின் கொடியும் இருக்கிறது. எங்கள் கட்சி கொடியின் வண்ணமும் சிவப்பு மற்றும் மஞ்சளை உள்ளடக்கியதாக தான் இருக்கிறது என்று கூறியிருக்கிறார் நடிகை ராதிகா.