Connect with us

ரஜினி உண்மையான மனுஷன்… ஆனால் கமல் பொய்.. போட்டு உடைத்த பிரபலம்!.

Rajini l Kamal

News

ரஜினி உண்மையான மனுஷன்… ஆனால் கமல் பொய்.. போட்டு உடைத்த பிரபலம்!.

Social Media Bar

Kavithalaya Krishnan: தற்பொழுது முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தன்னுடைய 70 வயதை கடந்தும் இன்னும் பல படங்களில் முன்னணி நடிகராக நடித்து வருகிறார். இவருகென்று தனியாக ரசிகர் கூட்டமே உள்ளது. அந்த அளவிற்கு ரஜினிகாந்த்துக்கு ரசிகர் கூட்டம் உலகெங்கிலும் உள்ளார்கள்.

இவர் ஆன்மீகத்தில் மிக நாட்டம் கொண்டவர். அதேசமயம் எளிமையாக பழகும் குணம் உடையவர் என இவரைப் பற்றி பேசும் பிரபலங்கள் கூறுவது வழக்கம்.

அதேபோல சமீபத்தில் ஒரு பேட்டியில் பிரபலம் ஒருவர் நடிகர் ரஜினிகாந்த் பற்றியும், நடிகர் கமலை பற்றியும் கருத்து ஒன்று கூறியிருக்கிறார். அது தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்

இருவரும் தங்களின் திரையுலக பயணத்தில் ஒரே மாதிரியான இடத்தை பிடித்திருக்கிறார்கள். அந்த வகையில் இன்றளவும் நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் நட்பு பாராட்டி வரும் வேளையில், ரஜினிகாந்த் தன்னுடைய படத்தை பற்றிய சில முடிவுகளை எல்லாம் அவ்வப்போது நடிகர் கமல்ஹாசனிடம் கேட்டு முடிவு செய்து இருக்கிறார்.

மேலும் பல நிகழ்ச்சி மற்றும் பல விழாக்களில் இருவரும் ஒன்றாக சந்தித்த பொழுதும் அருகே அருகே அமர்ந்து தங்களுடைய நட்பை இன்றளவும் வளர்த்து வருகிறார்கள். அந்த வகையில் இந்த இருவரை பற்றி பிரபலம் ஒருவர் பேசி இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கவிதாலயா கிருஷ்ணன்

கவிதாலயா கிருஷ்ணன் என்பவர் தமிழ் திரைப்படங்கள், சீரியல்களில் அதிகம் அறியப்பட்ட ஒரு நபர். இவர் கவிதாலயா புரொடக்சன் நிறுவனம் தயாரித்து இயக்குனர் கே.பாலச்சந்தர் இயக்கிய திரைப்படங்களிலும், தொடர்களிலும் நடித்து வந்ததால் இவரை அனைவரும் கவிதாலயா கிருஷ்ணன் என்று அடைமொழியாக அழைத்தார்கள்.

இவர் அதிக திரைப்படங்கள் மற்றும் அதிக சீரியல்களில் நடித்திருக்கிறார் மற்றும் பத்தாயிரம் மேடை நாடகங்களில் நடித்திருக்கிறார். இதனால் இவருக்கு தமிழ்நாடு அரசு கலைமாமணி விருது வழங்கியிருக்கிறது.

Kavithalaya Krishnan

இந்நிலையில் பேட்டி ஒன்றை கலந்து கொண்ட கவிதாலயா கிருஷ்ணன் ரஜினி, கமல் இந்த இருவரில் யார் உங்களுக்கு பிடிக்கும் என கேட்டுள்ளனர். அதற்கு எனக்கு ரஜினியை தான் பிடிக்கும். அவர் ஒரு உண்மையான மனிதர் என்றும், கமல் பொய்யானவர் என கூறியிருக்கிறார்.

முன்பெல்லாம் கமல் எப்படி இருக்கீங்க என்ன கேட்பதற்கு ஒரு வழி இருந்தது. ஆனால் தற்பொழுது அவ்வாறு நாம் அவரை கேட்க முடியாது. ஆனால் ரஜினிகாந்திடம் நாம் எப்படி வேண்டுமானாலும் பேசலாம். அவர் எல்லோரிடமும் நன்றாக பழகக் கூடியவர் எளிமையானவர் என கூறியிருக்கிறார்.

Articles

parle g
madampatty rangaraj
To Top