Cinema History
ரஜினியை ஆட்டம் காண வைத்த அந்த இரண்டு வருடங்கள்!.. வரிசையாக வந்த 12 தோல்வி படங்கள்!
சினிமாவில் எவ்வளவு பெரிய கதாநாயகனாக இருந்தாலும் தோல்வி படங்கள் என்பதை யாராலும் தடுக்க முடியாது. அது இயக்குநராக இருந்தாலும் சரி இசையமைப்பாளராக இருந்தாலும் சரி அவர்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அவர்களுக்கு தோல்வியை கொடுக்கக்கூடிய திரைப்படங்கள் இருந்து கொண்டே தான் இருக்கும்.
ஆனால் அதன் விகிதத்தை வைத்து தான் ஒரு நடிகர் எந்த அளவிற்கு மக்கள் மத்தியில் இடம் பிடித்துள்ளார் என்பதை அறிய முடியும். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் இதுவரை 169 திரைப்படங்களில் நடித்துள்ளார். அவற்றில் சில திரைப்படங்கள் தோல்வியை கண்டுள்ளன.
ஆனால் சினிமாவிற்கு வந்த ஆரம்ப கட்டத்தில் தொடர்ந்து பல தோல்வி படங்களை கொடுத்துள்ளார் ரஜினிகாந்த் இருந்தாலும் கூட தொடர்ந்து தன்னம்பிக்கையுடன் போராடி வந்தார். அதில் 1977 மற்றும் 1978 ரஜினிக்கு போதாத காலம் என்றுதான் கூற வேண்டும். ஏனெனில் அந்த சமயங்களில்தான் தொடர்ந்து தோல்வி படங்களாக கொடுத்து வந்தார்.
அந்த 2 வருடத்தில் மட்டும் 12 தோல்வி படங்களை கொடுத்திருந்தார் ரஜினி. அவற்றை இப்போது பார்க்கலாம்!.
(ஐ.எம்.டி.பி தரவுகளின் அடிப்படையில் எழுதப்பட்டது)
- கவிக்குயில் (1977)
- ரகுபதி ராகவ ராஜாராம் (1977)
- ஆறு புஷ்பங்கள் (1977)
- ஆடு புலி ஆட்டம் (1977)
- சங்கர் சலீம் சைமன் (1978)
- என் கேள்விக்கு என்ன பதில் (1978)
- மாங்குடி மைனர் (1978)
- சதுரங்கம் (1978)
- வணக்கத்துக்குரிய காதலியே (1978)
- இறைவன் கொடுத்த வரம் (1978)
- தப்பு தாளங்கள் (1978)
- ஜஸ்டிஸ் கோபிநாத் (1978)
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்