Connect with us

இளையராஜாவுக்காக ரஜினி நடித்த படம்.. இயக்க மறுத்த இயக்குனர்கள்!.. கடைசியில் கைக்கொடுத்த காமெடி நடிகர்!. யார் தெரியுமா?

ilayaraja rajinikanth

Cinema History

இளையராஜாவுக்காக ரஜினி நடித்த படம்.. இயக்க மறுத்த இயக்குனர்கள்!.. கடைசியில் கைக்கொடுத்த காமெடி நடிகர்!. யார் தெரியுமா?

Social Media Bar

Rajinikanth and Ilayaraja : தமிழ் சினிமா இசையமைப்பாளர்களில் மிகவும் முக்கியமானவர் இசைஞானி இளையராஜா. இளையராஜா சினிமாவில் பிரபலமாக இருந்த காலக்கட்டத்தில் அவருக்கு இணையான இன்னொரு இசையமைப்பாளர் இருக்க முடியாது என்று கூறலாம்.

இதனால் இளையராஜாவிற்கு புகழும் பணமும் அதிகமாகவே கிடைத்தது. எனவே ஒரு திரைப்படத்தை தயாரிக்கலாம் என முடிவெடுத்தார் இளையராஜா. பொதுவாகவே தமிழ் சினிமாவில் பிரபலங்கள் அதிகமாக பணம் சம்பாதிக்க துவங்கியவுடன் அவர்கள் படம் தயாரிக்க துவங்குவதுண்டு.

தற்சமயம் கூட சிவகார்த்திகேயன், லோகேஷ் கனகராஜ் போன்றவர்கள் தயாரிப்பதை பார்க்க முடியும். இளையராஜா படம் தயாரிக்க நினைத்தப்போது ரஜினிகாந்தை வைத்துதான் படமெடுக்க நினைத்தார். இதுக்குறித்து ரஜினிகாந்திடம் பேசியப்போது அவரும் கால் ஷூட் தருவதாக கூறினார்.

அடுத்து படத்திற்கு இயக்குனரை பிடிக்க வேண்டும். முதலில் வந்த இயக்குனர் ஒருவர் ஒரு கதையை கூறி படத்திற்கு ராஜாதி ராஜா என்று பெயரும் வைத்துவிட்டார். ஆனால் அவரால் அந்த கதையை தொடர முடியவில்லை. பிறகு சில இயக்குனர்கள் மாறிய பிறகும் கூட அந்த படத்தை இளையராஜாவால் தயாரிக்க முடியவில்லை.

இளையராஜா இப்படி தவிப்பதை கேள்விப்பட்ட பிரபல காமெடி நடிகர் ஆர்.சுந்தர்ராஜன் இளையராஜாவை அணுகி அந்த கதையை நான் படமாக்குகிறேன் என கூறினார். அப்படி சுந்தர்ராஜன் இயக்கிய ராஜாதி ராஜா அப்போது நல்ல வெற்றியை கொடுத்தது.

To Top