Connect with us

சரத்குமாரும் ரஜினியும் சேர்ந்து நடித்த ஜேம்ஸ்பாண்ட் படம்!.. சிறப்பான சம்பவமா இருக்கே!..

sarathkumar rajinikanth

Cinema History

சரத்குமாரும் ரஜினியும் சேர்ந்து நடித்த ஜேம்ஸ்பாண்ட் படம்!.. சிறப்பான சம்பவமா இருக்கே!..

Social Media Bar

Rajinikanth and Sarathkumar: தமிழில் மாஸ் திரைப்படங்களுக்கென்றே புகழ்ப்பெற்றவர் நடிகர் ரஜினிகாந்த். என்னதான் ரஜினிகாந்த் பல மாஸ் திரைப்படங்கள் நடித்திருந்தாலும் பெரும்பாலும் அவர் மட்டுமே கதாநாயகனாகதான் பல படங்களில் நடித்திருக்கிறார்.

இரண்டு கதாநாயகர்கள் உள்ளது போன்ற கதைகளில் இவர் நடிப்பது குறைவே. ஏனெனில் ரஜினிகாந்த் அவர் நடிக்கும் திரைப்படங்களில் மக்கள் அவருக்கு மட்டுமே விசில் அடிக்க வேண்டும் என நினைப்பவர் என பொதுவாக ஒரு பேச்சு உண்டு.

இதனால் மற்ற நடிகர்கள் தங்களது திரைப்படங்களில் நடிப்பதை அவர் ஏற்றுக்கொள்வதில்லை. இந்த நிலையில் அப்போதைய காலக்கட்டத்தில் ரஜினிகாந்தையும் சரத்குமாரையும் வைத்து ஒரு சிறப்பான கதையை எழுதியுள்ளனர்.

அந்த கதைப்படி சரத்குமார் காவல் துறைக்கு தகவல்கள் கொடுக்கும் உளவாளியாக இருக்கிறார். இந்தியாவில் நடக்கும் எந்த ஒரு குற்றம் பற்றியும் குற்றவாளி பற்றியும் சரத்குமாருக்கு தெரியும். இந்த நிலையில் இந்தியாவின் முக்கியமான குற்றம் ஒன்றை விசாரணை செய்வதற்கு நல்ல அதிகாரியை காவல்துறை தேடி வருகிறது.

அப்போதுதான் நேர்மையான அதிகாரியான ரஜினிகாந்தை இதற்காக கண்டுப்பிடிக்கின்றனர். இது ஒரு சர்வதேச வழக்கு என்பதால் ரஜினிகாந்திற்கு சரத்குமாரின் உதவி தேவைப்படுகிறது. இந்த நிலையில் இவர்கள் இருவரும் உலகம் முழுக்க சுற்றி வில்லனை பிடிப்பதே கதை என கூறப்படுகிறது.

இந்த கதையை ஒரு பேட்டியில் கூறியுள்ளார் நடிகர் சரத்குமார். இந்த படம் மட்டும் அப்போது வந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என கூறப்படுகிறது.

Articles

parle g
madampatty rangaraj
To Top