News
நான் விஜய்யை போட்டியாக நினைப்பது எனக்கு கவுரவம் கிடையாது!.. வெளிப்படையாக கூறிய ரஜினிகாந்த்!.
Vijay Rajini issue : விஜய் ரஜினி குறித்த சர்ச்சையானது வெகு நாட்களாகவே சினிமாவில் இருந்து வருகிறது. போன வருட துவக்கத்தில் வாரிசு படம் வெளியான பொழுது இந்த சர்ச்சை துவங்கியது. வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சரத்குமார் விஜய்யை அடுத்த ரஜினிகாந்த் எனக் கூறியதிலிருந்து சர்ச்சைகள் துவங்க ஆரம்பித்தன.
அதற்கு எதிராக ரஜினிகாந்த் தனது ஜெயிலர் திரைப்படத்தில் பேர தூக்க நாலு பேரு என்றெல்லாம் வசனங்கள் வைத்திருந்தார். மேலும் அவர் கூறிய காக்கா கழுகு கதை அப்போது வெகுவாக பேசப்பட்டது. அதில் காக்கா என்று ரஜினிகாந்த் விஜய்யை குறிப்பிடுகிறார் என்றெல்லாம் பேச்சுக்கள் இருந்தன.
இந்த நிலையில் அடுத்து வந்த லியோ திரைப்படத்தின் வெற்றி விழாவில் பேசிய விஜய் ஒவ்வொருத்தருக்கும் அவரவர் பட்டப்பெயர் முக்கியம். ரஜினி என்றால் அது ஒரு ரஜினிதான், தல என்றால் ஒரு தலதான் கேப்டன் என்றால் ஒரு கேப்டன் தான் அதேபோலதான் இந்த தளபதியும் என்று கூறியிருந்தார்.

தற்சமயம் லால் சலாம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த் காக்கா கழுகு கதையை பலரும் தவறாக புரிந்து கொண்டனர் நான் விஜய்யை விமர்சித்ததாக கூறி பலரும் சமூக வலைதளங்களில் இது குறித்து பேசி வருகின்றனர்.
இது எனக்கு மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியது ஏனெனில் விஜய் படிப்படியாக வளர்ந்து பெரிய நடிகராக உயர்ந்திருக்கிறார். அவருக்கும் எனக்கும் என்றைக்குமே போட்டி இருந்ததில்லை. எனக்கு எப்போதும் நான்தான் போட்டியாக இருப்பேன். அதேபோல விஜய்க்கும் அவர்தான் போட்டியாக இருப்பார். விஜய்யை நான் போட்டியாக நினைப்பது அல்லது அவர் என்னை போட்டியாக நினைப்பது எங்கள் இருவருக்கும் கௌரவமான விஷயமாக இருக்காது. நான் என்றும் விஜயின் நலம் விரும்பியாகவே இருப்பேன் என்று லால் சலாம் இசை வெளியீட்டு விழாவில் கூறி இருக்கிறார் ரஜினிகாந்த்.
