தமிழ்நாட்டில் விஜய்க்கு வாய்ப்பில்லை.. விஜய் அரசியல் எண்ட்ரி குறித்து ரஜினி குடும்பத்தில் இருந்து வந்த பதில்..!

Actor Vijay has started a party called T.V.K. Will he take power in 2026? has been a question on the one hand. Meanwhile, Rajinikanth’s relative commented on this

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியது முதலே அது குறித்த பேச்சுக்கள் என்பது அதிகமாகி வருகிறது. அதற்கு தகுந்தார் போல சமீபத்தில் விஜய் நடத்திய மாநாடு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றது.

யாரும் எதிர்பார்க்காத வகையில் அந்த மாநாட்டில் விஜய் பேசி இருந்தார். வெகு காலங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் இருக்கும் ஒரு டாப் நடிகர் மீண்டும் அரசியலுக்கு வருகிறார் என்னும் பொழுது பலருக்கும் அது ஆச்சரியத்தை அளித்து வருகிறது.

ரஜினியின் உறவினர் கொடுத்த பதில்:

vijay
vijay
Social Media Bar

அதே நிலையில் அரசியல் கட்சிகள் பலவும் விஜய்யின் செயல்பாடுகளை கவனிக்க துவங்கியிருக்கின்றன. ஏனெனில் ஒரு தெளிவான அரசியல் வாக்குறுதிகளை விஜய் அளித்திருக்கிறார். ஆனால் விஜய் ஆட்சியை பிடிக்க முடியுமா என்கிற கேள்வி ஒரு பக்கம் இருந்து கொண்டே இருக்கிறது.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் சகோதரரான சத்திய நாராயண ராவ் சமீபத்தில் விஜய்யின் அரசியல் வருகை குறித்து கருத்து தெரிவித்துள்ளார் அதில் அவர் கூறும் போது விஜய் இப்போது அரசியலுக்கு வர வேண்டும் என்று ஆசைப்பட்டு இருக்கிறார். ஆனால் அவரால் எளிதில் சாதிக்க முடியாது தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிப்பது மிகவும் கஷ்டமான ஒரு விஷயமாகும் இருந்தாலும் விஜய் முயற்சி செய்து பார்க்கட்டும் என்று அவர் கூறி இருக்கிறார்.