Tamil Cinema News
75 வயசுலையும் கூலிங் க்ளாஸ் லோ மோஷன்னு சுத்துற ஹீரோ… தன்னை தானே கேலி செய்து கொண்ட ரஜினிகாந்த்..!
நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் முக்கியமானவராக இருக்கிறார். பெரும்பாலும் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படங்கள் என்றாலே பெரிய ஹிட் திரைப்படங்களாகதான் இருந்து வருகின்றன.
இந்த நிலையில் சமீபத்தில் வேள்பாரி நாவலின் 1 இலட்சம் பிரதிகள் விற்பனையான வெற்றி விழாவில் ரஜினிகாந்த் கலந்துக்கொண்டார். வேள்பாரி தமிழ் இலக்கிய வட்டாரத்தில் மிக முக்கியமான ஒரு நாவலாகும். வேள்பாரி ஒரு வரலாற்று நாவலாகும்.
கடையெழு வள்ளல்களில் ஒருவரான வேள்பாரியை கதை நாயகனாக வைத்து இந்த கதை செல்கிறது. பறம்பு மலை என்கிற பகுதியின் மன்னரான வேள்பாரியை அழிப்பதற்கு மூவேந்தர்களும் ஒன்றினைகின்றனர். இந்த நிலையில் அவர்களை வேள்பாரி எப்படி எதிர்க்கிறான் என்பதாகதான் கதை செல்கிறது.
இந்த நிலையில் முதன் முதலாக தமிழில் வேள்பாரி நாவல் 1 லட்சம் பிரதிகள் விற்று சாதனை படைத்தது. அதற்காகதான் இந்த வேள்பாரி வெற்றி விழா நடந்தது.
அதில் பேசிய ரஜினிகாந்த் பேசும்போது இந்த விழாவிற்கு என்னை அழைத்தப்போது நான் வேள்பாரி நாவலை படிக்கவே இல்லையே.. என்னை எதற்கு அழைத்தீர்கள் என கேட்டேன். அதற்கு பதிலளித்த சு.வெங்கடேசன் உங்களுக்கு கதை சொல்வதற்கு நான் ஆள் அனுப்புகிறேன் அவர் வேள்பாரி கதையை சொல்வார் என்றார்.
அப்படியாக கதையை கேட்டுதான் இங்கு வந்தேன். நீங்கள் எல்லாம் நினைக்கலாம். ஒரு சினிமா பிரபலத்தை புத்தக விழாவிற்கு அழைப்பது என்றால் சிவக்குமாரை அழைத்திருக்கலாம். அதிகம் புத்தகம் படிப்பவர், பெரிய பேச்சாளர், இல்லை எனில் கமல்ஹாசனை கூப்பிட்டிருக்கலாம் அதை விட்டு விட்டு 75 வயதிலும் கூலிங் க்ளாஸ் போட்டுகிட்டு ஸ்லோ மோஷனில் நடந்து வரும் இவரை கூப்பிட்டு வந்திருக்கிறார்களா என நினைப்பீர்கள் என கிண்டலாக பேசியுள்ளார் ரஜினிகாந்த்.
