News
கடவுள் எனக்கு கொடுத்தது வரம் இல்லை.. தண்டனை.. ஓப்பன் டாக் கொடுத்த ரஜினி..!
பொதுவாக மக்கள் மத்தியில் பிரபலங்கள் குறித்த ஒரு பார்வை உண்டு. அது என்னவென்றால் கோடிகளில் சம்பாதிக்கும் பிரபலங்கள் கண்டிப்பாக மிக சந்தோஷமாக இருப்பார்கள்.
அவர்களுக்கு எந்த ஒரு குறையும் இருக்காது என்பதுதான் அவர்களின் எண்ணமாக இருக்கிறது. எப்பொழுதுமே மக்களின் ஓட்டம் என்பது பணத்தை நோக்கிதான் இருக்கிறது. ஒட்டுமொத்த வாழ்க்கையையும் பணத்தை சம்பாதிப்பதற்காக மட்டுமே வாழும் மனிதர்கள் இங்கு அtஹிகம்.
அப்படி இருக்கும் பொழுது மிக எளிதாக கோடிகளில் சம்பாதிக்கும் நடிகர்கள் மீது எப்பொழுதுமே பொது மக்களுக்கு ஒரு பொறாமை உண்டு இந்த நிலையில் அப்படியான ஒரு வாழ்க்கை என்பது வரம் கிடையாது சாபம் என்பதாக ரஜினிகாந்த் முன்பு ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.
ரஜினிகாந்த் கூறிய விஷயம்:
அதில் அவர் கூறும் பொழுது நமது வாழ்க்கையில் ஒரு ஆசைப்பட்ட எல்லாமே எப்போதும் கிடைத்துவிடக்கூடாது. சில விஷயங்கள் கிடைக்காமலே போகலாம். சில விஷயங்கள் நாம் மிகவும் போராடி கிடைக்கலாம்.
அப்படியெல்லாம் வாழ்க்கை இருந்தால்தான் அது மகிழ்ச்சியான வாழ்க்கையாக இருக்கும் எந்த ஒரு விஷயமும் கேட்ட உடனே கிடைத்துவிடும் என்றால் அதில் என்ன சுவாரஸ்யம் இருக்கிறது ஒரு கட்டத்திற்கு மேல் நாம் கேட்பதற்கு எதுவுமே இருக்காது இப்பொழுது அந்த வாழ்க்கையில் சுவாரஸ்யம் இல்லாமல் போய்விடும்.
எனவே கேட்டதெல்லாம் கிடைக்கும் அளவிற்கு வாழ்க்கை அமைவது ஒரு வரம் கிடையாது. அது ஒரு சாபம் என்று கூறியிருக்கிறார் ரஜினிகாந்த்.
