தற்சமயம் இயக்குனர் தா.செ ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து உருவாகி வரும் படம் வேட்டையன். வேட்டையன் திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது.
ஏனெனில் இந்த திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் தா.செ ஞானவேல் ஏற்கனவே ஜெய் பீம் என்கிற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். ஜெய் பீம் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற ஒரு படமாக இருந்து வந்த காரணத்தினால் இந்த திரைப்படமும் ஏதாவது ஒரு சமூக நீதி கருத்துக்களை கூறும் என்பது மக்களின் ஆவலாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்திற்கு பெரிதாக ப்ரமோஷன் இல்லாமல் இருந்த நிலையில் படத்தின் முதல் சிங்கிள் பாடலான மனசிலாயோ பாடல் வெளியானது.
அந்த பாடலே எக்கச்சக்கமான வரவேற்பை பாடத்தில் பெற்று கொடுத்தது இதுவரை ரஜினி வேட்டையன் என்கிற ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதே தெரியாமல் இருந்த ரசிகர்கள் கூட மனுசிலாயோ பாடலுக்கு பிறகு ரஜினி பெரும் படத்தில் நடித்து வருகிறார் என்று அறிந்து கொண்டிருக்கின்றனர்.
மோசமாக வர்ணித்த ரஜினி

இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது அந்த இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த் நிறைய சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசி இருந்தார்.
அதில் முக்கியமாக அவர் கூறும் பொழுது நடிகை மஞ்சு வாரியர் குறித்து ஒரு விஷயத்தை கூறியிருந்தார். இயக்குனர் என்னிடம் கூறும்பொழுது இந்த படத்தில் கதாநாயகியாக மஞ்சுவாரியர் நடிப்பதாக கூறியிருந்தார்.
நான் மஞ்சு வாரியார் நடித்த அசுரன் திரைப்படத்தை மட்டும் தான் பார்த்து இருக்கிறேன். அந்த திரைப்படத்தில் வயதான ஒரு பெண்ணாக தான் அவர் தெரிவார் எனவே சரி நமக்கு ஜோடியாக சரியாக இருப்பார்கள் என்று நினைத்தேன்.
ஆனால் நேரில் மஞ்சுவாரியரை பார்த்தால் தளதளவென்று ஒரு பெண் நிற்கிறார். இவர் எனக்கு ஜோடியா? என்னப்பா சொல்ற என்று நான் ஞானவேலிடம் சண்டை போட்டேன் என்று பேசியிருந்தார் ரஜினிகாந்த். இந்த நிலையில் ரஜினிகாந்தின் அந்த பேச்சு சர்ச்சையாக துவங்கி இருக்கிறது.






