Tamil Cinema News
இனிமே அந்த கேள்வி கேட்டால் அவ்வளவுதான்.. பத்திரிக்கையாளரிடம் சீறிய ரஜினிகாந்த்.!
நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் எப்போதுமே சூப்பர் ஸ்டார் என்கிற அளவில் பிரபலமான ஒரு நடிகராக இருந்து வருகிறார். கருப்பு வெள்ளை சினிமா காலக்கட்டங்களிலேயே சினிமாவில் அறிமுகமானார் நடிகர் ரஜினிகாந்த்.
அதற்கு பிறகு தமிழ் சினிமாவில் எவ்வளவோ நடிகர்கள் வந்த பிறகும் கூட தொடர்ந்து ரஜினிக்கான மார்க்கெட் என்பது குறையவே இல்லை. இப்போதும் தமிழ் சினிமாவில் டாப் 10 பாக்ஸ் ஆபிஸ் திரைப்படங்கள் என லிஸ்ட் எடுத்தால் அதில் ரஜினியின் படங்கள் இரண்டு இருக்கின்றன.
இந்த நிலையில் தற்சமயம் ரஜினிகாந்த் கூலி என்கிற திரைப்படத்தி நடித்து வருகிறார். கூலி திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக அடிக்கடி விமான நிலையம் செல்வதும் திரும்ப வருவதையும் வேலையாக கொண்டுள்ளார் ரஜினிகாந்த்.
ரஜினிகாந்த் ஒவ்வொரு முறை விமான நிலையம் செல்லும்போதும் திரும்ப வரும்போதும் பத்திரிக்கையாளர்கள் அவரை பிடித்து கேள்வி கேட்ட வண்ணம் இருக்கின்றனர். ஆனால் ரஜினிகாந்திற்கு இது பிடிக்கவில்லை.
இந்த நிலையில் சமீபத்தில் அவரிடம் மீண்டும் அரசியல் தொடர்பான கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ரஜினிகாந்த் அரசியல் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாது என சென்றுவிட்டார்.