ரசிகர்களின் வெகுநாளைய காத்திருப்பிற்கு பிறகு தற்சமயம் ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கிறது. இந்த ட்ரெயிலரை பொறுத்தவரை படத்தின் கதைப்படி ரஜினிகாந்த் ஒரு என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் என தெரிகிறது.
இந்த படத்தில் நீதிபதி கதாபாத்திரத்தில் நடிகர் அமிதாப்பச்சன் நடித்திருக்கிறார். அமிதாப்பச்சனை பொருத்தவரை அவர் இந்த மாதிரியான என்கவுண்டர் கொலைகளுக்கு எதிரான ஒரு கதாபாத்திரமாக இருக்கிறார் ஆனால் ரஜினிகாந்தை பொறுத்தவரை குற்றம் செய்பவர்களை கொலை செய்வதில் தவறு இல்லை என்கிற மன நிலையில் இருக்கிறார்.
இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே இருக்கும் பிரச்சனைகளை வைத்து கதை செல்லும் என்று கூறப்படுகிறது. பகத் ஃபாசில் ஒரு திருடன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரஜினிகாந்துக்கு உதவும் கதாபாத்திரமாக இவர் இருப்பார் என்று கூறப்படுகிறது.
வேட்டையன் ட்ரைலர்:
படத்தில் ரக்ஷன் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக பேச்சுக்கள் இருந்தன. ஆனால் படத்தின் ட்ரைலரில் ரக்ஷனை காணவில்லை இந்த நிலையில் இந்த படத்தின் இயக்குனர் தா.செ ஞானவேல் ஏற்கனவே ஜெய் பீம் என்கிற திரைப்படத்தை இயக்கியிருந்தார்.
இந்த திரைப்படம் சமூகநீதி திரைப்படமாக இருந்தது. அதே போல வேட்டையன் திரைப்படமும் ஒரு சமூகநீதி படமாக இருக்கும் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில் வழக்கமான ரஜினி திரைப்படம் போலவே ஒரு கமர்ஷியல் திரைப்படமாக அமைந்திருக்கிறது வேட்டையன் திரைப்படம்.
இது ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. ஏன் ரஜினி மாதிரியான ஒரு கமர்சியல் நடிகர் சமூக நீதி படங்களில் நடிக்க கூடாதா? இயக்குனர் பா ரஞ்சித் ரஜினியை வைத்து சமூகநீதி படம் எடுக்கவில்லையா என்று கேள்விகளை எழுப்பத் துவங்கி இருக்கின்றனர்.