Tamil Cinema News
ராம்கியோட எனக்கு இருந்த உறவு?.. வீட்ல செம அடி வாங்கியிருக்கேன்.. நீரோஷாவே சொல்லி இருக்கார் பாருங்க.!
இணைந்த கைகள், வெற்றிப் படிகள் மாதிரியான நிறைய திரைப்படங்களில் ராம்கியும் நீரோஷாவும் சேர்ந்து நடித்திருக்கின்றனர். அவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த காலகட்டங்களில் அவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்கிற பேச்சு திரைத்துறையில் அதிகமாகவே இருந்தது.
நீரோஷா குடும்பத்தை பொறுத்தவரை அவர் சினிமாவிற்கு நடிக்க வருவதில் அவர்களுக்கு விருப்பமே இருக்கவில்லை. இருந்தாலும் நிரோஷா ஆசைப்பட்டதால் சினிமாவிற்கு அனுப்பினர். ஒருவேளை சினிமாவில் தோல்வியை கண்டுவிட்டால் திரும்ப வந்துவிடு என்று கூறிதான் அவர்கள் அனுப்பி இருக்கின்றனர்.
ஆனாலும் நீராஷாவிற்கு தொடர்ந்து படங்கள் வெற்றிகளை கொடுத்த காரணத்தினால் ஒரு வெற்றிகரமான கதாநாயகியாக அவர் மாறினார். இருந்தாலும் கூட மிக முக்கியமான விதிமுறை ஒன்று நிரோஷாவிற்கு வைக்கப்பட்டிருந்தது.
யாருக்கும் தெரியாமல் காதல்:
அதாவது சினிமா துறையில் யாரையும் காதலித்து திருமணம் செய்யக்கூடாது. நடிப்போடு நிறுத்திக் கொள்ள வேண்டும் திருமணம் வெளியில் வேறு யாரையாவது பார்த்து தான் செய்து கொள்ள வேண்டும். என்று கூறப்பட்டிருந்தது.
இந்த விஷயங்களை நீரோஷா ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். மேலும் அவர் கூறும் பொழுது ராம்கி உடன் நான் பழகி வந்த நாட்களில் எங்கள் வீட்டிற்கு தெரியாமல் மறைமுகமாக தான் பழகி வந்தேன். படப்பிடிப்பு இடங்களில் கூட தினசரி எனது வீட்டில் இருந்து யாராவது ஒருவர் வந்து விடுவார்கள் அதனால் ராம்கியிடம் முகம் பார்த்து கூட என்னால் பேச முடியாது.
அந்த மாதிரி ராம்கியுடன் போனில் பேசி எங்கள் வீட்டில் சிக்கி செம அடி வாங்கி இருக்கிறேன் என்று அந்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார் நிரோஷா .