2023 ஆம் ஆண்டு டிசம்பர் ஒன்றாம் தேதி இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான திரைப்படம்தான் பார்க்கிங்.
சாதரணமாக சென்னை போன்ற பெரும் நகரங்களில் வாகனங்களை பார்க்கிங் செய்வதில் நிறைய பிரச்சனைகள் ஏற்படுவது உண்டு. ஆனால் அதையே ஒரு கதைக்களமாக உருவாக்கி அதை வைத்து பெரிய பெரிய விஷயங்களை அந்த திரைப்படத்தில் செய்திருந்தார் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன்.
இந்த நிலையில் பார்க்கிங் திரைப்படத்திற்கு மூன்று தேசிய விருதுகள் தற்சமயம் கிடைத்து இருக்கிறது. பெரும்பாலும் அறிமுக இயக்குனர்கள் படங்களுக்கு அவ்வளவு சீக்கிரத்தில் தேசிய விருதுகள் கிடைத்துவிடாது. ஆனால் ராம்குமாருக்கு தனது ஆரம்ப நிலையிலேயே இப்படி ஒரு தேசிய விருது கிடைத்தது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

அவரது சினிமா வாழ்க்கையிலும் இனி தொடர்ந்து அவருக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த படம் இந்திய அளவில் சிறந்த திரைக்கதைக்கான விருதை பெற்றிருக்கிறது இதற்கு முன்பு தமிழ் சினிமாவில் இந்திய அளவில் சிறந்த திரைக்கதைக்கான விருதை காதல் மன்னன் திரைப்படம் பெற்றது.
அந்த திரைப்படத்திற்குப் பிறகு அதே அளவிலான ஒரு தகுதியைப் பெற்றிருக்கிறது ஹரிஷ் கல்யாண் நடித்த பார்கிங் திரைப்படம்.