Actress
திருமணத்துக்கு பிறகும் அப்படியேதான் இருக்காங்க.. படுத்துக்கொண்டே போஸ் கொடுத்த ரம்யா பாண்டியன்.!
தமிழ் சினிமாவில் கிடைக்காத வரவேற்பை சமூக வலைதளம் வழியாக பெற்றவர் நடிகை ரம்யா பாண்டியன்.
ஆரம்பத்தில் ரம்யா பாண்டியன் சினிமாவிற்கு வந்த பொழுது நல்ல நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்தார். தமிழில் குரு சோமசுந்தரம் நடித்து வெளியான ஜோக்கர் திரைப்படத்தில் கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் ரம்யா பாண்டியன்.
ஆனாலும் கூட அந்த நடிப்புக்கு பெரிதாக வரவேற்பு என்பதே கிடைக்கவில்லை அதன் பிறகு இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்ட சில புகைப்படங்கள் அதிக வைரலானது.
அதனை தொடர்ந்து ரம்யா பாண்டியனுக்கு தமிழ் சினிமாவில் வரவேற்பு கிடைக்க துவங்கியது. ஒரு கட்டத்திற்கு மேல் சின்னத்திரையின் மீது ஆர்வம் காட்டிய ரம்யா பாண்டியன் தொடர்ந்து விஜய் டிவியில் நிறைய நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு வந்தார்.
இந்நிலையில் சமீபத்தில்தான் ரம்யா பாண்டியனுக்கு திருமணம் ஆனது திருமணத்திற்கு பிறகு ரம்யா பாண்டியன் பெரிதாக பழைய மாதிரி புகைப்படங்களை வெளியிட மாட்டார் என்று பலரும் நினைத்து வந்த நிலையில் சமீபத்தில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் அதிக வைரல் ஆகி வருகிறது.
