News
டாடாவிடம் இருந்து வந்த மிஸ்ட் கால்.. நாய்க்காக பிரிட்டிஷ் அரசு குடும்பத்தையே நிராகரித்த ரத்தன் டாடா..!
இந்தியாவில் உள்ள தொழிலதிபர்களின் மிக முக்கியமானவர் ரத்தன் டாடா அவரை குறித்த சுவாரஸ்யமான செய்தி ஒன்று பலருக்குமே ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது.
ரத்தன் டாடா சிறுவயதில் இருந்தே செல்லப்பிராணிகள் மீது அதிக ஈடுபாடு கொண்டவர். முக்கியமாக நாய்கள் மீது அவருக்கு அதிக பாசம் உண்டு சிறுவயதிலிருந்தே நாய் வளர்ப்பதில் அதிக கவனம் செலுத்தி வருவார் ரத்தன் டாடா.
எப்போதுமே ஓய்வு நாட்களில் தனது நாய்களுடன்தான் கழித்து வருவார் கிட்டத்தட்ட அவரது குடும்ப உறுப்பினர்களாக தான் அவரது நாய்கள் இருந்து வந்தன. முக்கியமாக ஆரம்பத்தில் ரத்தன் டாடா எந்த வளர்ப்பு நாயையும் வளர்க்கவில்லை.
ரத்தன் டாடாவிற்கு கிடைத்த மரியாதை:
தெரு நாய்களைதான் வளர்த்து வந்தார். இந்த நிலையில் பிரிட்டிஷ் அரசு குடும்பத்தை சேர்ந்த இளவரசர் சார்லஸ் ஒருமுறை ரத்தன் டாடாவிற்கு மரியாதை செலுத்தினார். அதற்காக ஒரு விழாவை ஏற்பாடு செய்த சார்லஸ் அதற்கு சிறப்பு விருந்தினராக ரத்தன் டாடாவை அழைத்து இருந்தார்.
இதற்காக லண்டன் செல்ல ஆயத்தமாக இருந்த ரத்தன் டாடா பிறகு அந்த பயணத்தை கேன்சல் செய்து விட்டார். இது தெரியாமல் அவரது மேலாளர் ஏற்கனவே லண்டனுக்கு சென்றிருந்தார். லண்டனுக்கு சென்ற பிறகு அவரது போனை எடுத்து பார்த்தபொழுது பதினோருமுறை ரத்தன் டாடா அவருக்கு போன் செய்திருந்தது தெரிந்தது.
என்னவென்று போன் செய்து கேட்கும் பொழுது அவர் ஆசையாக வளர்த்த நாய் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும் அதனால் லண்டனுக்கு வர முடியாது என்றும் கூறிவிட்டார் இந்த நிலையில் இந்த விஷயத்தை கேள்விப்பட்ட இளவரசர் சார்லஸ் இதற்காகவே டாடாவை புகழ்ந்து பேசி இருக்கிறார்.
