News
ரத்தன் டாடாவுக்கு ஸ்கெட்ச் போட்ட ரவுடி.. பதிலுக்கு டாடா செய்த காரியம்தான் தெறி..
இந்தியாவில் உள்ள பிரபலமான தொழிலதிபர்களின் மிக முக்கியமானவர் ரத்தன் டாடா. பொதுமக்களுக்கு நிறைய நன்மைகளை செய்தவர் என்கிற காரணத்தினாலேயே அதிகமாக கொண்டாடப்படும் ஒரு தொழிலதிபராக இவர் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் எல்லா தொழிலதிபர்களும் தொழில் சார்ந்து நிறைய பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும். அப்படியாக ஒரு ரவுடியிடம் டாடாவிற்கு ஏற்பட்ட பிரச்சனை குறித்து அவரே ஒருமுறை பேசி இருக்கிறார்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பொறுப்பாளராக இருந்த பொழுது அந்த நிறுவனத்தை மூடச் சொல்லி ஒரு பெரிய ரவுடியிடம் இருந்து எச்சரிக்கை வந்தது. ஆனால் நான் அதை செய்யவில்லை நான் போலீஸிடம் இது குறித்து கூறினேன்.
டாடா செய்த வேலை:
ஆனால் போலீஸ் எடுத்த உடனே இதற்கு பெரிதாக நடவடிக்கை எடுக்க முடியாது என்று கூறிவிட்டனர். இந்த நிலையில் எனது ஊழியர்கள் சிலரை அந்த ரவுடிகள் தாக்கினர். இதனால் அவர்கள் வேலைக்கு வருவதற்கு பயந்தனர்.
பிறகு அவர்களை எல்லாம் அழைத்து நான் அவர்களுக்கு தன்னம்பிக்கையை கொடுத்தேன் பிறகு சில நாட்களிலேயே அந்த ரவுடி கைது செய்யப்பட்டான் அதற்குப் பிறகு வெளிவந்தவுடன் அவன் நிறைய முறை என்னை கொல்வதற்கு முயற்சி செய்தான். ஆனால் நான் விட்டுக் கொடுக்கவே இல்லை என்று கூறியிருக்கிறார் ரத்தன் டாடா.
