ஜெயம் ரவி இயக்கத்தில் யோகி பாபு அடுத்து வர இருக்கும் காம்போ..!

விவாகரத்துக்கு பிறகு நடிகர் ஜெயம் ரவி நிறைய புது முயற்சிகளை எடுக்கத் தொடங்கி இருக்கிறார். கதாநாயகனாக மட்டும் நடிக்காமல் வில்லன் கதாபாத்திரத்திலும் நடிக்க ஒப்பு கொண்டிருக்கிறார்.

சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் பராசக்தி திரைப்படத்தில் அவருக்கு வில்லனாக ஜெயம் ரவி நடிக்கிறார். அதே மாதிரி அவருடைய தயாரிப்பிலும் இயக்கத்திலும் படங்கள் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

Social Media Bar

ஜெயம் ரவியின் தயாரிப்பில் இரண்டு திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து வருமென்று பேச்சுக்கள் இருக்கின்றன. அதேபோல யோகி பாபுவை வைத்து ஒரு திரைப்படத்தை ஜெயம் ரவியே இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதுவரை இருந்த ஜெயம் ரவியில் இருந்து மொத்தமாக மாறுபட்ட ஒரு ஜெயம் ரவியை இனி திரையில் பார்க்கலாம் என்றும் சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் இருக்கின்றன.