Connect with us

அதை பெரிசாக்க ஆப்பரேஷன் செஞ்சேன்.. சர்ச்சையை கிளப்பிய ரேஷ்மா பசுபுலேத்தி..!

reshma

News

அதை பெரிசாக்க ஆப்பரேஷன் செஞ்சேன்.. சர்ச்சையை கிளப்பிய ரேஷ்மா பசுபுலேத்தி..!

Social Media Bar

தமிழ் சினிமாவில் எப்படி சினிமா நடிகைகளுக்கு ஒரு மார்க்கெட் இருக்கிறதோ அதேபோல சீரியல் நடிகைகளுக்கும் ஒரு பெரிய மார்க்கெட் இருக்கிறது.

சீரியல்களில் நல்ல வரவேற்பு பெரும் நடிகைகளுக்கு சினிமாவில் எளிதாக வாய்ப்பு கிடைப்பதை பார்க்க முடியும். ஏனெனில் சினிமாவை பொறுத்த வரை மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர்களுக்கு எளிதாக வாய்ப்பு கிடைத்துவிடும்.

அந்த வகையில் சினிமாவில் முதலில் அறிமுகமாகி அதற்கு பிறகு சீரியலுக்கு சென்று பிரபலமானவர் நடிகை ரேஷ்மா பசுபுலேத்தி. வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் புஷ்பா என்கிற கதாபாத்திரத்தில் இவர் நடித்தார்.

நாடகங்களில் வாய்ப்பு:

அந்த கதாபாத்திரத்திற்கு கிடைத்த வரவேற்பின் காரணமாக அவருக்கு நாடகங்களில் நடிப்பதற்கும் வாய்ப்புகள் கிடைத்தது. பாரதி கண்ணம்மா மாதிரியான பிரபலமான சில சீரியல்களில் தொடர்ந்து நடித்தார் ரேஷ்மா.

reshma

இந்த நிலையில் சினிமாவில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்றால் அதற்கு கவர்ச்சி மிக முக்கியம் என்பதை அவர் அறிந்திருந்தார். அதனை தொடர்ந்து தனது முகம் பார்ப்பதற்கு கவர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக உதட்டை பெரிதாக்குவதற்கான சிகிச்சை செய்திருக்கிறார் ரேஷ்மா.

திரைப்பட வரவேற்பு:

ஆனால் அதனை தொடர்ந்து அவருக்கு உதடு வழக்கத்தை விட கொஞ்சம் அதிகமாகவே பெரிதாகிவிட்டது. பிறகு அதனை விமர்சித்து நிறைய பேர் பேசி இருந்தனர். இருந்தாலும் கூட ரேஷ்மா அது குறித்து கவலைப்படுவதாக தெரியவில்லை.

இந்த நிலையில் இந்த விஷயங்களை அவரே ஒரு பேட்டிகள் பேசியும் இருக்கிறார் தற்சமயம் ரேஷ்மா நிறைய சீரியல் வாய்ப்புகளை பெற்று வரும் நடிகையாக இருக்கிறார். அதே சமயம் சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமாகி வருகிறார் ரேஷ்மா.

To Top