சீரியஸாதான் சொல்றீங்களா… மாதவன் கேள்வியால் அதிர்ச்சியடைந்த நடிகை ரித்திஹா சிங்.!
இறுதி சுற்று திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரித்திஹா சிங். இறுதி சுற்று திரைப்படத்தில் அவர் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இதனை தொடர்ந்து அவருக்கு அடுத்தடுத்த படங்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தது.
ஆனால் திரைப்படங்களின் கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்தாமல் இருந்து வந்தார் ரித்திஹா. இதனை தொடர்ந்து அவருக்கு வெகு சீக்கிரத்திலேயே சினிமாவில் வாய்ப்புகள் குறைய துவங்கின. இந்த நிலையில் அவர் நடித்த ஓ மை கடவுளே மாதிரியான ஒரு சில படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.
சமீபத்தில் கூட ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்த வேட்டையன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ரித்திஹா. சொல்ல போனால் படத்தின் கதை முழுக்கவே வரும் ஒரு கதாபாத்திரமாக ரித்திஹாவின் கதாபாத்திரம் இருந்தது.
இந்த நிலையில் சமீபத்தில் தனக்கு வாய்ப்பு கிடைத்த கதையை பகிர்ந்துள்ளார் நடிகை ரித்திஹா. அதில் அவர் கூறும்போது எனக்கு ஒரு நாள் மாதவன் போன் செய்தார். எனக்கு ஏற்கனவே மாதவனை பிடிக்கும் ஒரு சில ஹிந்தி படங்களில் அவரை நான் பார்த்துள்ளேன்.
புது எண்ணில் இருந்து போன் வந்ததால் முதலில் நான் எடுக்கவில்லை. அதற்கு பிறகு நான் போனை எடுத்ததும் அந்த பக்கத்தில் இருந்து நான் மேடி பேசுகிறேன் என குரல் கேட்டது.
நான் உடனே மேடி என்றால் எந்த மேடி என கேட்டேன். ஏனெனில் மாதவன் எனக்கு போன் செய்வார் என்று எனக்கு எப்படி தெரியும். உடனே அவர் ஆக்டர் மாதவன் என கூறினார். அதற்கு பிறகு என் படத்தில் நீங்கள் நடிக்க வேண்டும்.
அது ஒரு பாக்ஸர் கதாபாத்திரம் உங்களுக்கு அது செட்டாகும் என கூறினார். நான் அவரிடம் என்ன விளையாடுகிறீர்களா? இதற்கு முன்பு நான் கேமிராவுக்கு முன்பு நடித்ததே கிடையாது என கூறினேன் என அந்த நிகழ்வை பகிர்ந்துள்ளார் நடிகை ரித்திஹா.