Tamil Cinema News
படம் பண்ண தெரியாம களத்தில் இறங்கிய ஆர்.ஜே பாலாஜி.. எல்.கே.ஜி, மூக்குத்தி அம்மன் படத்தில் செய்த தவறுகள்.!
தமிழ் சினிமா பிரபலங்களில் சில நடிகர்கள்தான் சாதாரண இடத்தில் இருந்து வந்து சினிமாவில் சாதிக்கின்றனர். பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த ஆண்களுக்கு எப்போதும் நடிப்பு மீது ஒரு ஆர்வம் இருப்பதுண்டு. ஆனால் எல்லோருக்குமே அதற்குள் வாய்ப்புகள் கிடைத்துவிடுவதில்லை.
அப்படியாக தமிழ் சினிமாவில் பிரபலமானவர்தான் ஆர்.ஜே பாலாஜி. ஆர்.ஜே பாலாஜி நடிக்கும் திரைப்படங்கள் பெரும்பாலும் காமெடி படங்களாகதான் இருக்கும். அவரும் இப்போதுதான் சிவகார்த்திகேயன் போலவே தன்னுடைய திரைப்படங்களில் சீரியஸான காட்சிகளை வைத்து வருகிறார்.
இறுதியாக அவரது நடிப்பில் வெளியான சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தில் கூட கொஞ்சம் சீரியஸான காட்சிகள் இருப்பதை பார்க்க முடிந்தது. இந்த நிலையில் ஆர்.ஜே பாலாஜிக்கு திரைப்படங்கள் இயக்குவது மேல்தான் ஆரம்பத்தில் இருந்தே ஆர்வம் இருந்து வந்தது. இந்த நிலையில் அவர் இயக்கிய சில படங்கள் நல்ல வெற்றியையும் கொடுத்துள்ளது..
ஆரம்பத்தில் எல்.கே.ஜி திரைப்படத்திற்கு கதை எழுதும்போது ஆர்.ஜே பாலாஜிக்கு பெரிதாக கதை எழுதுவதில் அனுபவம் இருக்கவில்லை. எனவே படத்தில் அதிக கதாபாத்திரங்களை வைக்கவில்லை. கதாநாயகனை மட்டுமே முக்கிய கதாபாத்திரங்களாக வைத்து கதை அமைப்பை வைத்தார்.
அதற்கு பிறகு வந்த மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில்தான் ஓரளவுக்கு அதிக கதாபாத்திரங்களை வைத்து கதை களத்தை அமைத்தார். அதனை தொடர்ந்து அடுத்து அவர் இயக்கிய வீட்ல விசேசம் திரைப்படத்திலும் கூட கதாபாத்திரங்களை அதிகரித்தார்.
இந்த விஷயத்தை ஒரு பேட்டியில் பேசும்போது ஆர்.ஜே பாலாஜி பகிர்ந்துள்ளார்.
