Tamil Cinema News
தொடர்ந்து நிராசையாகிவரும் ஆர்.ஜே பாலாஜியின் ஆசை.. இந்த வாட்டியும் நிறைவேறலை..!
தமிழ் சினிமாவில் சாதாரண காமெடி நடிகராக வந்து தற்சமயம் ஒரு முக்கிய பிரபலமாக மாறி இருப்பவர் ஆர்.ஜே பாலாஜி. சில நடிகர்கள்தான் எவ்வளவு வளர்ந்தாலும் சினிமாவில் வந்த புதுசில் எப்படி இருந்தார்களோ அதே போல இருப்பார்கள்.
அப்படி இருக்கும் நடிகர்களில் ஆர்.ஜே பாலாஜியும் ஒருவர். ஆர்.ஜே பாலாஜி ஒரு முக்கியமான நடிகராக மாறிவிட்டார். மேலும் இரண்டு திரைப்படங்களை ஏற்கனவே அவர் இயக்கி இருக்கிறார். அப்படியெல்லாம் இருந்தும் கூட சமீபத்தில் ஒரு ரசிகர் மீட்டிங் போடப்பட்டது.
ஆர்.ஜே பாலாஜியின் ஆசை:
அதில் பழைய ரேடியோவில் வேலை பார்க்கும் ஆர்.ஜே பாலாஜியாகவே அவர் பேசியிருந்தார். இப்பொழுதும் ஐ.பி.எல் மேட்ச்களுக்கு சென்று அங்கும் பேசி வருகிறார். இந்த நிலையில் ஆர்.ஜே பாலாஜி சினிமாவிற்கு வந்த காலகட்டத்தில் இருந்தே ஏ.ஆர் ரகுமானோடு சேர்ந்து பணி புரிய வேண்டும் என்பது அவருடைய ஆசையாக இருந்து வருகிறது.
ஒவ்வொரு முறை ஆர்.ஜே பாலாஜி திரைப்படம் இயக்கும்பொழுதும் ஏ.ஆர் ரகுமானிடம் அந்த படத்திற்கு இசையமைக்கும்படி கேட்பது உண்டு. அந்த வகையில் இப்பொழுது அவர் சூர்யாவை வைத்து இயக்கும் படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைப்பதாக இருந்தது.
ஆனால் இப்பொழுது சில காரணங்களால் இசையமைப்பாளர் மாற்றப்பட்டுள்ளது. இந்த இந்த நிலையில் பிரபல இசை கலைஞரான சாய் அபயங்கரை இசை அமைப்பாளராக முடிவு செய்து இருக்கின்றனர். ஏற்கனவே இரண்டு வெற்றி பாடல்களை அவர் கொடுத்திருக்கிறார் என்பதால் சூர்யா திரைப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட ஒரு இசையை பார்க்க முடியும் என்று கூறப்படுகிறது.
