Connect with us

உன் பொண்டாட்டிய வச்சி அப்படி பண்ணாதப்பா!.. வேற ஒருத்தன் பொண்டாட்டிய வச்சி பண்ணவா!.. ரோஜா கணவர் கடுப்பாக இதுதான் காரணம்!..

rk selvamani roja

Cinema History

உன் பொண்டாட்டிய வச்சி அப்படி பண்ணாதப்பா!.. வேற ஒருத்தன் பொண்டாட்டிய வச்சி பண்ணவா!.. ரோஜா கணவர் கடுப்பாக இதுதான் காரணம்!..

Social Media Bar

தமிழ் சினிமாவில் முதல் திரைப்படம் மூலமாகவே அதிகமாக வரவேற்பை பெற்ற இயக்குனர் ஆர்.கே செல்வமணி. ஆர்.கே செல்வமணி இயக்கிய முதல் திரைப்படமான புலன் விசாரணை தமிழ் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றது.

இத்தனைக்கும் புலன் விசாரணை திரைப்படத்தின் கதையை நிறைய தயாரிப்பாளர்களிடம் கூறினார் ஆர் கே செல்வமணி. ஆனால் பலரும் அந்த கதை நல்ல வெற்றியை கொடுக்காது என்று நினைத்து வேண்டாம் என்று கூறினார்கள்.

விஜயகாந்திடம் கதையை கூறும் பொழுது கூட ராவுத்தர் இந்த கதையை பெரிதாக ஒப்புக்கொள்ளவில்லை. ஏனெனில் படம் நன்றாக வரும் என்பதில் யாருக்குமே நம்பிக்கை வராமல் இருந்தது. விஜயகாந்துமே கூட அந்த படம் நன்றாக வரும் என்று நம்பவில்லை.

பெரும் வெற்றி:

ஆனால் வெளியான பிறகு புலன் விசாரணை கொடுத்த வெற்றி பெரிதாக இருந்தது. அதற்குப் பிறகுதான் தன்னுடைய நூறாவது திரைப்படம் கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தை ஆர்கே செல்வமணிதான் இயக்க வேண்டும் என்று கூறினார் விஜயகாந்த்.

கேப்டன் பிரபாகரன் திரைப்படத்திற்கு பிறகு ஆர் கே செல்வமணி இயக்கிய திரைப்படம் செம்பருத்தி. இந்த திரைப்படத்தை இயக்கும்போது தான் இவருக்கும் நடிகை ரோஜாவுக்கும் இடையே காதல் உண்டானது. வழக்கமான தமிழ் பிரபலங்கள் போல திருமணத்திற்கு பிறகு நடிக்க கூடாது என்று விதிமுறை போடாமல் ரோஜாவை அவர் இஷ்டத்திற்கு நடிப்பதற்கு அனுமதித்தார் ஆர்கே செல்வமணி.

அப்பொழுது அது தொடர்பாக நிறைய பிரச்சனைகளை சந்தித்ததாக ஒரு பேட்டியில் அவர் கூறியிருக்கிறார். முக்கியமாக அவர் இயக்கும் நிறைய திரைப்படங்களிலேயே ரோஜாவுக்கு கவர்ச்சி பாடல்கள் எல்லாம் வைத்திருந்தார் ஆர் கே செல்வமணி.

இயக்குனர் கேட்ட கேள்வி:

இது குறித்து அவர் கூறும் பொழுது இந்த மாதிரியான பாடல்களை நான் வைக்கும் பொழுது என்னை சுற்றி இருந்தவர்கள் என்னிடம் வந்து உனது மனைவியை வைத்து இந்த மாதிரியான பாடல்களை எடுக்கிறாயே என்று கேட்டிருக்கின்றனர்.

அப்போது நான் அவர்களிடம் அப்ப அடுத்தவன் மனைவியை வைத்து இந்த மாதிரி பாட்டு எடுத்தால் அது நியாயமா என்று கேட்டுள்ளேன். எனது மனைவிக்கு நடிப்பது பிடித்திருந்தது அவர்கள் தேர்ந்தெடுத்துக்கும் கதையில் தான் அவள் நடித்து வந்தார். யாரும் அவரை வற்புறுத்தவில்லை அப்படி இருக்கும் பொழுது அதில் நான் என்ன குற்றம் சொல்ல முடியும் மற்ற பெண்களும் யாரோ ஒருவருக்கு மனைவியாக இருப்பவர்கள் தானே என்று பேசி இருந்தார் இயக்குனர் ஆர் கே செல்வமணி.

Articles

parle g
madampatty rangaraj
To Top