Tamil Cinema News
விஜய் சினிமாவுக்கு வரக்கூடாது.. அதான் என் ஆசை.. ஆர்.கே செல்வமணி இப்படி சொல்ல காரணம் என்ன?
தமிழில் டாப் நடிகராக இருந்தாலும் கூட தற்சமயம் சினிமா வேண்டாம் அரசியல் தான் வேண்டும் என்று அரசியல் பக்கம் சென்றிருக்கிறார் நடிகர் விஜய்.
நடிகர் விஜய் அரசியலுக்கு சென்றது பலருக்கும் அதிருப்தியான ஒரு விஷயமாகதான் இருந்து வருகிறது. ஏனெனில் நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படங்களுக்கு எப்பொழுதும் கோடிக்கணக்கில் வசூல் கிடைத்து வருகிறது.
இவ்வளவு பெரிய மார்க்கெட்டை தமிழ் சினிமாவில் வைத்துக் கொண்டு எந்த ஒரு நடிகரும் அதை விட்டுவிட்டு அரசியலுக்குள் செல்ல நினைக்க மாட்டார்கள். அப்படி இருக்கும் பொழுது நடிகர் விஜய் மட்டும் ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்தார் என்பது சிலருக்கு வருத்தத்தை அளிக்கிறது.
அரசியலுக்கு செல்லும் விஜய்:
ஆனாலும் அரசியலுக்கு சென்று விஜய் என்ன செய்யப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பு தற்சமயம் தமிழ்நாடு மக்கள் மத்தியில் அதிகரிக்க துவங்கியிருக்கிறது. இந்த நிலையில் தமிழில் புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன் போன்ற திரைப்படங்களை இயக்கிய ஆர்.கே செல்வமணியிடம் இது குறித்து கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த ஆர்.கே செல்வமணி விஜய் சினிமாவை விட்டுப் போகிறார் என்பதில் எனக்கு வருத்தம்தான் ஆனாலும் அதற்காக விஜய் திரும்ப சினிமாவிற்கு வர வேண்டும் என்று நான் கூற மாட்டேன். உண்மையில் விஜய் சினிமாவிற்கு திரும்ப வரக்கூடாது.
அரசியல் களத்தில் இறங்கிய விஜய் அங்கு பெரிய சாதனைகளை செய்ய வேண்டும். திரும்ப அவர் சினிமாவிற்குள் வந்தால் இந்த சாதனைகளை அவரால் செய்ய முடியாது சினிமா அவருக்கு ஒரு தடையாக நின்று விடும் என்று கூறி இருக்கிறார் ஆர்.கே செல்வமணி.
