ரத்தம் குடிக்கும் ஆவி வேட்டையை கொண்ட கதை.. இந்த மலேசிய பேய் படத்தை பார்த்து இருக்கீங்களா? – ROH (2019) Movie Tamil review

மலேசியாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்ற திரைப்படம் ரோ என்ற திரைப்படம். மர்மமான பேய் படம் என்றாலும் கூட அதிக பயத்தை ஏற்படுத்தும் ஒரு படமாக இருக்கிறது.

படத்தின் கதைப்படி கடந்த கால நிகழ்வு ஒன்றுதான் மர்ம நிகழ்வுகளுக்கு காரணமாக இருக்கிறது. ஒரு காட்டில் இரண்டு குழந்தைகள் தங்களுடைய தாயுடன் ஒரு கொட்டகையில் தனியாக வாழ்ந்து வருகின்றனர்.

மர்ம காடு:

அந்த தாய் விதவையாக இருந்து வருகிறார். ஒருநாள் உயரமான கிளைகளுக்கு இடையே இறந்த மான் ஒன்று தொங்கிக் கொண்டிருப்பதை அவர்கள் பார்க்கிறார்கள். அந்த சமயத்தில் ஒரு இளம் பெண் இவர்களை பின் தொடர்ந்து வருகிறார்.

Social Media Bar

அனாதையாக இருக்கும் அந்த பெண்ணை தங்கள் குடும்பத்தில் சேர்த்துக் கொண்டு அந்த குழந்தைகள் இருவரும் தங்களது சகோதரியாக அந்த பெண்ணை ஆக்கிக் கொள்கின்றனர்.

இந்த நிலையில் இந்த காட்டில் ஒரு சபிக்கப்பட்ட ஆவி வலம் வருவதாகவும் அது தொடர்ந்து விலங்குகளை வேட்டையாடி வருவதாகவும் ஒரு கதை இருக்கிறது. அதை குழந்தைகளிடம் சொல்லும் தாய் இரண்டு கற்களை ஒன்றாக தட்டி ஒரு மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் அந்த சபிக்கப்பட்ட சக்தியிடம் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ளலாம் என்று கூறுகிறார்.

அனாதை பெண்:

இதற்கு நடுவே தொடர்ந்து மர்மமான விஷயங்கள் அந்த காட்டில் நடக்கிறது மேலும் நீங்கள் அனைவரும் இறந்து விடுவீர்கள் என்று கூறுகிறாள் புதிதாக வந்த அந்த பெண் மேலும் அதை கூறியதோடு மட்டுமின்றி அவளும் தற்கொலை செய்துக்கொள்கிறாள். இது பலருக்கும் பயத்தை ஏற்படுத்துகிறது இந்த நிலையில் இந்த மர்மமான காட்டில் இருந்து அந்த குடும்பம் எப்படி தப்பிக்க போகிறது என்பதே இந்த திரைப்படத்தின் கதை.

வெளியான காலகட்டத்தில் அதிக வரவேற்பு பெற்ற படமாக இது இருந்தது ஏனெனில் காட்டில் ஒரு குடும்பம் மட்டும் தனியாக இருக்கிறது என்பதே இந்த படத்தில் அதிக அச்சத்தை ஏற்படுத்தும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது இந்த திரைப்படம் மக்களிடம் அதிக  ஆதரவைப் பெற்ற படமாக இருக்கிறது.