News
நாங்க ரெண்டு பேரும் லவ் பண்றோம்?.. உண்மையை உடைத்த ரவீனா..!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலமாக மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றவர் ரவீனா. ஆரம்பத்தில் இவர் நிறைய திரைப்படங்களில் நடித்து வந்திருக்கிறார் அப்பொழுதெல்லாம் இவருக்கு பெரிதாக வரவேற்புகள் கிடைக்கவில்லை.
இந்த நிலையில்தான் பிக் பாஸில் பங்கு பெற்று அதன் மூலமாக வரவேற்பை பெறலாம் என்று நினைத்தார் ரவீனா. பிக் பாஸில் பங்கு பெற்ற பொழுது மணி என்கிற நபரை காதலித்து வந்தார் ரவீனா. இவர்கள் இருவருமே பிக் பாஸில் பங்கு பெற்று வந்தனர்.
ரவீனா காதல் விவகாரம்:
இந்த நிலையில் ரவீனா பிக் பாஸில் இருந்து வெளியேறிய பிறகு அவருக்கும் மணிக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அவர்கள் இருவரும் பிரிந்தனர். இந்த நிலையில் தற்சமயம் ரவீனா ரோஷன் என்கிற இன்னொரு நபருடன் சேர்ந்து எப்போதும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
இதனை தொடர்ந்து ரவீனாவிற்கும் ரோஷனுக்கும் காதல் இருப்பதாக பல நாட்களாகவே பேச்சுக்கள் இருந்து வந்தன. இந்நிலையில் இது குறித்து கமெண்ட் செய்த ரசிகர் ஒருவர் இவர்கள் இருவரும் நண்பர்கள்தான் தவறான செய்தியை பரப்பாதீர்கள் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் ரோஷன் அதற்கு லைக் அளித்துள்ளார். எனவே உண்மையிலேயே அவர்கள் இருவரும் நண்பர்கள்தான் போல என்று பேச்சுக்கள் எழுந்து வருகின்றன.
