அந்த படம் திரும்ப வருமா சார்!.. எஸ்.ஜே சூர்யாவை சர்ச்சைக்குள் சிக்கிவிட ப்ளான் போல!..
S J Surya : நியூ படம் வெளியாக ஆண்டுகள் பல கடந்துவிட்டது. இயக்குனர் SJ சூரியா நடிகராக நடித்த முதல்படம் இவருடன் இணைந்து சிம்ரன், தேவயாணி மற்றும் கிரண் ராத்தோட் போன்றோர் நடித்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான படம்.
முதல் படத்திலே மிக அருமையான நடிகராக நடித்ததோடு ஒரு ஆவரேஜ் சக்சஸ் கொடுத்த படம். இப்படத்தின் கதை பகலில் சிறுவன் இரவில் இளைஞன் என்ற கதாப்பாத்திரம். கற்பனைக்கும் எட்டாத கதாப்பாத்திரம் தான் ஆனாலும் தமிழ் ரசிகர்களை ஈர்த்த திரைப்படம்.
இந்த படம் வெளியாகி பல ஆண்டுகள் கடந்து இயக்குனராக இருந்த SJ சூரியா தற்போது தமிழ் திரைப்படங்களில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக நடிப்பு அரக்கனாக உருவாகியிருக்கிறார்.

பத்திரிக்கையாளர் சந்திப்பில் அடுத்து படம் இயக்குவது குறித்த கேள்விக்கு அதற்கான காலம் வரும் என்று நம்புகிறேன் என்றும் நியூ 2 வாய்ப்புள்ளா என்ற கேள்விக்கு அதே போன்றதொரு படம் அந்த படத்தின் தொடர்ச்சி என்றால் சற்று சிந்திக்க வேண்டும். ஆனால் அதன் தொடர்ச்சியாக அமைய வாய்ப்பில்லை.
கற்பனையையும் தாண்டி உண்மை நிலையை கூறமுடியாது, மக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று பதிலளித்துள்ளார், மேலும் நியூ படம் வெளிவந்த போது படத்தின் இயக்குனரும், நடிகருமான SJ சூர்யா மீது வழக்கு தொடரப்பட்டு சர்ச்சைக்குள்ளானது குறிப்பிடத்தக்கது. மேலும் நியூ 2ஆம் பாகம் எடுக்க முடியாததற்கு அந்த சர்ச்சையும் ஒரு காரணமாக இருக்கலாம்.