Cinema History
இறுதியாக குணசேகரனுக்கு பதிலா தேர்வானது விஜய் அப்பாவா? என்னப்பா சொல்றீங்க!..
தமிழ் சினிமாவில் வெகு காலங்களாக துணை நடிகராகவும் உதவி இயக்குனராகவும் இருந்து வந்தவர் நடிகர் மாரிமுத்து. பரியேறும் பெருமாள் திரைப்படம் இவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தார் மாரிமுத்து.
அதனைத் தொடர்ந்து அவருக்கு அதிகமான வாய்ப்புகள் வர துவங்கின அதனைத் தொடர்ந்து நாடகங்களிலும் நடிப்பதற்கான வாய்ப்புகள் அவருக்கு வரத் துவங்கின. இந்த நிலையில் கலைஞர் தொலைக்காட்சியில் கிழக்கு வாசல் என்கிற ஒரு நாடகம் துவங்கப்பட இருந்தது.
அதே சமயத்தில் சன் டிவியில் எதிர்நீச்சல் என்கிற நாடகமும் துவங்க இருந்தது இரண்டில் நடிப்பதற்கான வாய்ப்புகளும் மாரிமுத்துவிற்கு வந்தது. முதலில் அவருக்கு எதிர்நீச்சலில் நடிப்பதற்கான வாய்ப்புதான் வந்தது. எனவே எதிர்நீச்சலில் நடிக்க சென்று விட்டார்.
அதற்குப் பிறகு கிழக்கு வாசல் என்கிற நாடகத்தில் நடிப்பதற்கு அவரை அழைத்தனர். அந்த நாடகத்திலும் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரம் அவருக்கு வழங்கப்பட இருந்தது. ஆனால் ஏற்கனவே எதிர்நீச்சல் நாடகத்தில் நடித்துக் கொண்டிருப்பதால் அவரால் அதில் நடிக்க முடியவில்லை.
பிறகு மாரிமுத்து நடிக்க இருந்த அந்த கதாபாத்திரத்தை நடிகரும் இயக்குனருமான எஸ்.ஏ சந்திரசேகருக்கு வழங்கினர். தற்சமயம் அந்த கதாபாத்திரத்தில் எஸ் எஸ் சந்திரசேகர்தான் நடித்து வருகிறார்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்