Tamil Cinema News
அண்ணன் தம்பி ரெண்டு பேரும் என்னை பாடா படுத்தி எடுத்துட்டாங்க. தனுஷ் செல்வராகவன் குறித்து. சாய் பல்லவி ஓப்பன் டாக்.!
மலர் டீச்சர் என்கிற கதாபாத்திரம் மூலமாக மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் நடிகை சாய் பல்லவி. அவர் நடித்த முதல் படமான பிரேமம் திரைப்படம் அவருக்கு எக்கச்சக்கமான வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.
அதனை தொடர்ந்து சாய் பல்லவி தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக மாறினார். பெரும்பாலும் சாய் பல்லவி நடிக்கும் திரைப்படங்களுக்கு என்று ஒரு வரவேற்பு இருந்து வருகிறது. அதேபோல கிடைக்கும் படங்களில் எல்லாம் சாய்பல்லவி நடிப்பது கிடையாது.
அவருக்கு ஒரு வருடத்தில் எக்கச்சக்கமான திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வருகின்றன. ஆனாலும் நல்ல கதை அம்சத்தை கொண்ட திரைப்படங்களில் மட்டுமே சாய் பல்லவி நடித்து வருகிறார்.
செல்வராகவன் மற்றும் தனுஷ்:
இந்நிலையில் தனுஷ் மற்றும் செல்வராகவன் குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியிருந்தார். அதில் அவர் கூறும் பொழுது தனுஷின் அண்ணனான செல்வராகவன் இயக்கிய என் ஜி கே திரைப்படத்தில் நான் கதாநாயகியாக நடித்தேன்.
அதேபோல நடிகர் தனுசுடன் இணைந்து மாரி 2 திரைப்படத்தில் நான் நடித்திருக்கிறேன். நான் செல்வராகவன் படத்தில் நடிக்க செல்லும் பொழுது நடிகர் தனுஷ் என்னிடம் அண்ணன் உங்களுக்கு ஏதாவது தொல்லை கொடுத்தால் சொல்லுங்கள் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறுவார்.
அதே போல தனுசுடன் நடிக்க செல்லும் பொழுது செல்வராகவன் என்னிடம் தனுஷ் ஏதாவது தொல்லை கொடுத்தால் சொல்லுங்கள் நான் பார்த்து கொள்கிறேன் என்று கூறுவார். ஆனால் இருவருமே படப்பிடிப்பில் என்னை பாடாய்படுத்தி விட்டனர் என்று நகைச்சுவையாக கூறியிருக்கிறார் சாய்பல்லவி.
