Connect with us

இவ்வளவு வருஷம் கழிச்சி வர்ற படம் கொஞ்சம் பெட்டரா பண்ணியிருக்கலாமோ!.. ராமராஜனின் சாமானியன் எப்படி இருக்கு?

ramarajan samaniyan

Movie Reviews

இவ்வளவு வருஷம் கழிச்சி வர்ற படம் கொஞ்சம் பெட்டரா பண்ணியிருக்கலாமோ!.. ராமராஜனின் சாமானியன் எப்படி இருக்கு?

Social Media Bar

பல வருடங்களுக்கு பிறகு ராமராஜன் நடிப்பில் தயாராகி இன்று திரையில் வெளியாகி இருக்கும் திரைப்படம் சாமானியன். இந்த திரைப்படத்தை இயக்குனர் ராகேஷ் இயக்கியுள்ளார். ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த கதாநாயகனாக ராமராஜன் இருந்தார்.

ஆனால அவரை வைத்து படம் இயக்க வேண்டும் என இப்போது இருக்கும் எந்த ஒரு இயக்குனருக்கும் தோன்றாதது வருத்தமான விஷயம்தான். இந்த நிலையில் இயக்குனர் ராகேஷ் இயக்கிய சாமானியன் எப்படி இருக்கு என பார்க்கலாம்.

சாமானியன் கதையை பொறுத்தவரை மதுரையில் இருந்து சென்னைக்கு ஒரு வேலையாக வரும் ராமராஜன் பணம் எடுப்பதற்காக ஒரு வங்கிக்கி செல்கிறார். அப்போது அந்த வங்கிக்குள் ஒரு மர்ம கும்பல் நுழைந்து பணத்தை திருட பார்க்கிறது.

இதற்கு நடுவே ராமராஜன் என்ன செய்கிறார் என்பதை வைத்து கதை செல்கிறது. இதில் பல நல்ல கருத்துக்களை மக்களிடம் சொல்ல வேண்டும் என ராமராஜன் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருந்தாலும் இப்போதைய தலைமுறையினருக்கு அது அவ்வளவாக ஒத்து வரவில்லை என்றே கூற வேண்டும்.

படத்தின் இசையமைப்பாளராக இளையராஜா இருந்தது இயக்குனருக்கு ஒரு சாதகமான அம்சமாக மாறிவிட்டது. எனவே படம் முழுக்க இளையராஜாவின் இசையில் வந்த ராமராஜன் பாடல்களை அவர் பயன்படுத்தியிருக்கிறார்.

பொதுவாக ராமராஜன் திரைப்படங்கள் கிராமத்தைதான் கதை களமாக கொண்டிருக்கும். ஆனால் இதில் சென்னைதான் கதைகளமாக இருக்கிறது. மேலும் வழக்கமாக ராமராஜன் படத்தில் வரும் கலர் கலர் ஆடைகள், கதாநாயகிகள், பாடல்கள் இது எதுவுமே இந்த திரைப்படத்தில் கிடையாது.

படம் முழுக்க எக்கச்சக்கமான நடிகர்கள் இருந்தாலும் அவர்களுக்கான முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. அதே போல நகைச்சுவை காட்சிகளும் அந்த அளவிற்கு ஒட்டவில்லை என்றே கூற வேண்டும். இப்போதைய தலைமுறையினருக்கு ஏற்றாற் போல இந்த படம் வந்திருந்தால் இன்னமும் வரவேற்பை பெறும் படமாக இருந்திருக்கும்.

சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் பழைய ராமராஜன் பட ரசிகர்களுக்கு இந்த படம் பிடித்த படமாக இருக்கும். ஆனால் இப்போதைய தலைமுறையினருக்கு பிடித்த படமாக இருக்குமா? என்பது சந்தேகமே

To Top