Connect with us

ஆண் நண்பருடன் கவர்ச்சி உடையில்… அதிர்ச்சியை கொடுத்த நடிகை சமந்தா!.

samantha

Actress

ஆண் நண்பருடன் கவர்ச்சி உடையில்… அதிர்ச்சியை கொடுத்த நடிகை சமந்தா!.

Social Media Bar

தமிழில் தொடர்ந்து வரவேற்பு பெறும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகை சமந்தா. தமிழில் பாணா காத்தாடி திரைப்படம் மூலமாக முதன்முதலாக அறிமுகமானார்.  அந்த படம் பெரிதாக வரவேற்பை பெற்று தரவில்லை.

தெலுங்கில் ஒரு சில திரைப்படங்களில் நடித்த பிறகு நான் ஈ மற்றும் விண்ணைத்தாண்டி வருவாயா ஆகிய இரண்டு திரைப்படங்கள் மூலம் தெலுங்கில் அவருக்கு வரவேற்பு கிடைத்தது. அதே திரைப்படங்கள் மூலமாக தமிழிலும் வரவேற்பை பெற்றார்.

தமிழில் வரவேற்பு:

தமிழில் அவருக்கு நீ தானே என் பொன்வசந்தம் திரைப்படம் மிகப்பெரிய மாற்றத்தை கொடுத்தது. அதில் நடித்த சமந்தா அனைவரையும் கவறும் வகையில் மிக அழகாக இருந்தார். கிட்டத்தட்ட தற்சமயம் மமிதா பைஜு எப்படி பிரபலமாக இருக்கிறாரோ அதே மாதிரியான ஒரு கூட்டம் அப்பொழுது சமந்தாவிற்கு ரசிகர்களாக இருந்தனர்.

அதற்குப்பிறகு தெலுங்கு பிரபல நடிகரான நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சமந்தா. ஆனால் அவர்களது இல்லற வாழ்க்கை அவ்வளவு சுகமாக அமையவில்லை. இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக அதற்குப் பிறகு சமந்தா பிரிந்து விட்டார்.

பிரிந்துவிட்ட நிலையில் சினிமா மீது தொடர்ந்து ஆர்வம் காட்டி வந்தார் சமந்தா. இந்த நிலையில் அவருக்கு உடம்பில் ஏற்பட்ட உடல்நல குறைபாடு காரணமாக சில வருடங்கள் தமிழில் இருந்து விலகி இருந்தார். சொல்ல போனால் பெரிய பெரிய நடிகர்கள் திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைத்தும் கூட அப்பொழுது அவரால் நடிக்க முடியாமல் போய்விட்டது.

ஹிந்தியில் வாய்ப்பு:

இந்த நிலையில் தற்சமயம் உடல்நிலை தேறிவரும் நிலையில் மீண்டும் சினிமாவில் ரீ எண்ட்ரி கொடுத்து வருகிறார் சமந்தா. இந்த நிலையில் தற்சமயம் அவருக்கு ஹிந்தி சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில்தான் புகைப்படம் ஒன்றை சமீபத்தில் வெளியிட்டிருக்கிறார் பிரபல ஹிந்தி நடிகர் ஆன வருண் தவானுடன் இணைந்து அந்த புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார் சமந்தா. வருண் தவானின் தோளில் கை போட்டு அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தின் மூலமாக அடுத்த அவர் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படத்தில் இவர் நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

 பொதுவாகவே வருண் தவான் திரைப்படத்தில் அதிகமாக கவர்ச்சி காட்சிகள் இருக்கும் அந்த வகையில் இந்த திரைப்படத்திலும் கூட சமந்தாவிற்கு அந்த மாதிரி காட்சிகள் இருக்கலாம் என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன.

To Top