Tamil Cinema News
சந்தானத்துக்காக அதை பண்ணுனேன்.. இறங்கு வந்த தேவயாணி புருஷன்.!
தமிழ் சினிமாவில் ஒரு காலக்கட்டத்தில் பிரபலமான இயக்குனராக இருந்தவர் இயக்குனர் ராஜகுமாரன். இவர் இயக்குனர் விக்ரமனிடம் ஆரம்பக்கால கட்டத்தில் உதவி இயக்குனராக பணிப்புரிந்து வந்தார். இந்த நிலையில் சூர்ய வம்சம் திரைப்படம் எடுக்கப்படும்போது இவருக்கு நடிகை தேவயாணி மீது காதல் ஏற்பட்டது.
பிறகு தனியாக இயக்குனர் ஆன பிறகு இவர் இயக்கிய திரைப்படம் விண்ணுக்கும் மண்ணுக்கும், இந்த திரைப்படத்தின்போதுதான் தேவயானியும் கூட இவரை காதலிக்க துவங்கினார். இந்த நிலையில் இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.
சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் தேவயானியின் கணவர் நடித்து வந்தார். இந்த நிலையில் சந்தானத்தோடு நடித்த அனுபவத்தை அவர் கூறியிருந்தார். அதில் அவர் கூறும்போது வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் சந்தானத்திற்கு கதாநாயகனாக முதல் படம்.
அந்த திரைப்படத்தில் நான் அவருடன் காமெடி செய்யும் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என கேட்டார். எனக்கும் அந்த கதாபாத்திரம் பிடித்திருந்தது. ஒப்புக்கொண்டேன் என கூறியுள்ளார் ராஜகுமாரன். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் திரைப்படத்தில் ஒரு ரயில் காட்சியில் சந்தானத்தை கலாய்க்கும் இரு நபர்கள் வருவார்கள். அதில் ராஜ் என்னும் கதாபாத்திரத்தில்தான் ராஜகுமாரன் நடித்திருந்தார்.
