சமீபத்தில் நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான திரைப்படம் டிடி நெக்ஸ்ட் லெவல். இந்த திரைப்படத்தில் ஒரு திரைப்படத்திற்கு உள்ளே போய் மாட்டிக் கொள்ளும் திரைப்பட விமர்சகர் என்கிற கதாபாத்திரத்தில் தான் சந்தானம் நடித்திருந்தாr.
சந்தானத்தை பழிவாங்கக்கூடிய பேய் கதாபாத்திரத்தில் செல்வராகவன் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் திரைப்பட விமர்சனம் குறித்த நிறைய விஷயங்களை வெளிப்படையாக பேசியிருந்தார் சந்தானம்.
அது பல சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஓசி டிக்கெட் வாங்கி திரைப்படத்திற்கு வருவதாக பாடல் வரிகளில் குறிப்பிட்டிருந்தார் சந்தானம். இது குறித்து பத்திரிகையாளர்கள் கேட்டபோது சந்தானம் அதற்கு விளக்கம் அளித்திருந்தார்.
அவர் கூறும் பொழுது ரசிகர் மன்ற ஷோ என்றெல்லாம் கூறி நிறைய பேர் இலவச டிக்கெட் வாங்கி படத்திற்கு வந்து படம் பார்ப்பவர்களையும் தொல்லைப்படுத்துகிறார்கள். அவர்களை குறிப்பிடும் விதமாக தான் அந்த வரிகளை வைத்தேன் என்று கூறினார்.

உடனே பத்திரிகையாளர் சந்தானத்திடம் நீங்கள் இந்த திரைப்படத்தில் ஓசி டிக்கெட்டில் படம் பார்ப்பவரா இல்ல திரையரங்குகளில் டிக்கெட் எடுத்து படம் பார்ப்பவரா என்று கேட்டனர்.
அதற்கு பதில் அளித்த சந்தானம் நான் ஒரு திரைப்பட விமர்சகர் என்பதால் நான் ஓசி டிக்கெட்டில் தான் படம் பார்ப்பேன் என்று கூறியிருக்கிறார்.