Connect with us

நான் போட்ட ரூல்ஸ்ல ஏ.வி.எம் சரவணனே ஆடி போயிட்டார்!.. விக்ரம் படத்தில் இயக்குனர் செய்த சம்பவம்!..

vikram avm saravanan

Cinema History

நான் போட்ட ரூல்ஸ்ல ஏ.வி.எம் சரவணனே ஆடி போயிட்டார்!.. விக்ரம் படத்தில் இயக்குனர் செய்த சம்பவம்!..

Social Media Bar

AVM Saravanan : பொதுவாக தயாரிப்பாளர்களிடம் வாய்ப்புகள் வாங்குவது என்பது இயக்குனர்களுக்கு குதிரை கொம்பான விஷயமாக இருக்கும் அப்படி இருக்கும் பொழுது பெரும் தயாரிப்பாளர்களிடம் வாய்ப்பு கிடைக்கும் போது அந்த தயாரிப்பாளர்கள் என்ன சொன்னாலும் அதைக் கேட்டுக் கொண்டு அதற்கு ஏற்றார் போல திரைப்படங்களை எடுக்க இயக்குனர்கள் தயாராக இருப்பார்கள்.

முக்கியமாக அந்த படத்தின் கதையிலேயே கூட தயாரிப்பாளர் மாற்றத்தை ஏற்படுத்தினாலும் கூட அதை ஏற்றுக்கொண்டு படத்தை எடுப்பார்கள் ஏனெனில் படம் வெளியாக வேண்டும் என்பது மட்டுமே இயக்குனர்களின் குறிக்கோளாக இருக்கும்.

ஆனால் தமிழின் மிகப்பெரும் தயாரிப்பாளரான ஏ.வி.எம் சரவணன் தயாரிப்பில் படம் எடுப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்த போதும் கூட தன்னுடைய விதிமுறைகளில் இருந்து மாறாமல் இருந்திருக்கிறார் இயக்குனர் சரண். சரண் இயக்கத்தில் வரும் காதல் திரைப்படங்களுக்கு அப்போது வரவேற்பு அதிகமாக இருந்தது.

ஒரு ஐந்து விதிமுறைகளை ஜெமினி திரைப்படத்தை எடுப்பதற்கும் முன்பு ஏ.வி.எம் சரவணன் இடம் கூறி இருக்கிறார் சரண். அந்த விதிமுறைகளை வேறு யார் கூறியிருந்தாலும் ஏ.வி.எம் சரவணன் அதற்க்கு ஒப்புக்கொண்டிருக்க மாட்டார் என்று கூறப்படுகிறது.

இது குறித்து சரண் ஒரு பேட்டியில் கூறும்பொழுது ஏ.வி.எம் சரவணனிடம் நான் போட்ட விதிமுறைகளில் முதல் விதிமுறை படத்தின் கதை என்னுடைய அதிகாரத்தின் கீழ்தான் இருக்கும் கதையை நான் நினைத்தால் மட்டுமே மாற்றுவேன்.

கதாநாயகனும் தயாரிப்பாளரும் என்னுடைய கதையில் குறிக்கிடக் கூடாது அதேபோல படத்தின் தலைப்பு என்ன என்பதையும் நான்தான் முடிவு செய்வேன் பிறகு தயாரிப்பாளர் எக்காரணத்தை கொண்டும் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து பார்வை இடுவது போன்ற விஷயங்களை செய்யக்கூடாது. அதேபோல எடிட்டிங் செய்யும் பொழுதும் அங்கு வந்து தயாரிப்பாளர் எதையும் நோட்டமிட கூடாது. இசையமைப்பாளர் யார் என்பதையும் நான் தான் முடிவு பண்ணுவேன்.

படத்தில் இசையமைப்பாளரை தயாரிப்பாளர் முடிவு செய்ய முடியாது. இந்த முடிவுகளுக்கு எல்லாம் உங்களுக்கு சரி என்றால் மட்டும் நான் படம் எடுக்கிறேன் என்று நேரடியாக கூறி இருக்கிறார் இயக்குனர் சரண். இதனை எல்லாம் பொறுமையாக கேட்ட ஏ.வி.எம் சரவணன் யோசித்து கூறுகிறேன் என்று கூறியிருக்கிறார்.

அதன் பிறகு சரணின் இயக்கம் எப்படிப்பட்டது என்பதை தெரிந்து கொண்ட அவர் உங்கள் விருப்பத்திற்கு படத்தை எடுங்கள் என்று கூறியிருக்கிறார் இந்த விஷயத்தை சரண் ஒரு பேட்டியில் பகிர்ந்து இருந்தார்.

To Top