Connect with us

3BHK 9 நாள் வசூல் நிலவரம்.. நல்ல வெற்றிதான்..!

Box Office

3BHK 9 நாள் வசூல் நிலவரம்.. நல்ல வெற்றிதான்..!

Social Media Bar

இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சரத்குமார் மற்றும் தேவயானி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் 3 BHK.

இதில் சித்தார்த் மற்றும் மீதா ரகுநாத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். வாடகை வீட்டில் இருக்கும் நடுத்தர வர்க்க குடும்பத்தை சேர்ந்த சரத்குமாரின் குடும்பம் ஒரு சொந்த வீடு வாங்க நினைக்கிறது.

அதனை அடிப்படையாகக் கொண்டு இந்த படத்தின் கதைகளம் செல்கிறது இந்த படம் வெளியான முதல் நாளிலிருந்து அதிக வரவேற்பை பெற்று வந்தது. இந்த நிலையில் படம் வெளியாகி ஒன்பது நாட்கள் ஆன நிலையில் தற்சமயம் 10 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது 3 BHK திரைப்படம்.

இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தவண்ணம் இருந்தாலும் கூட திரையரங்கை பொறுத்தவரை படத்திற்கு நல்ல வெற்றி கிடைத்திருக்கிறது என்று கூறலாம் இந்த வருடம் குறைந்த பட்ஜெட்டில் வந்து வெற்றியை கொடுத்த திரைப்படங்களின் வரிசையில் தற்சமயம் 3BHK திரைப்படம் இடம் பெற்றுள்ளது.

To Top