Connect with us

நான்கு நாட்களில் வசூலை குவித்த 3BHK.. இத்தனை கோடி வசூலா?

Box Office

நான்கு நாட்களில் வசூலை குவித்த 3BHK.. இத்தனை கோடி வசூலா?

Social Media Bar

தமிழில் குறைந்தபட்ஜெட் திரைப்படங்களுக்கு இப்பொழுது வரவேற்புகள் அதிகமாக இருந்து வருகிறது.

முக்கியமாக பெரிய படங்கள் எதுவும் வராத சமயத்தில் வெளியாகும் சின்ன படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியாகி அதிக வரவேற்பு பெற்ற படமாக 3BHK திரைப்படம் இருக்கிறது.

இந்த திரைப்படத்தில் சரத்குமார் தேவயானி சித்தார்த் போன்றோர் முன்னணி கதாபாத்திரங்களாக நடித்திருக்கின்றனர். ஒரு நடுத்தர குடும்பத்திற்கு எப்பொழுதுமே சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது பெரிய கனவாக இருக்கும்.

அதையே கதை அம்சமாக கொண்டு இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கையோடு இந்த கதை ஒத்துப் போகும் காரணத்தினால் இதற்கு வரவேற்பு அதிகமாக கிடைத்துள்ளது.

இந்த படம் வெளியான நான்கு நாட்களிலேயே 6.5 கோடி ரூபாய் வசூலித்து இருக்கிறது. இவ்வளவு குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு ஆறு கோடி வசூல் செய்வது என்பது பெரிய விஷயம் என்பதால் இது ஒரு வெற்றி படமாக மாறி இருக்கிறது.

To Top