Connect with us

இவருக்கு வாய்ப்பு கொடுக்கலாமா? சரத்குமார் செய்த சம்பவம்!. திகைத்து போன தயாரிப்பாளர்!.

sarathkumar

Cinema History

இவருக்கு வாய்ப்பு கொடுக்கலாமா? சரத்குமார் செய்த சம்பவம்!. திகைத்து போன தயாரிப்பாளர்!.

Social Media Bar

தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி அதன் பிறகு ஹீரோவாக நடிக்க தொடங்கிய நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சரத்குமார். ஆரம்பத்தில் அனைவரும் இவரை பார்த்து பயப்படும் அளவிற்கு வில்லன் கதாபாத்திரங்களில் நடித்த சரத்குமார், போகப்போக கதாநாயகனாக நடிக்க தொடங்கினார்.

வில்லனாக அதுவரை அவரை பார்த்த மக்கள் பிறகு கதாநாயகனாகவும் அவரை ஏற்றுக் கொண்டனர். இத்தனைக்கும் மீசையை இல்லாமல் கோட் சூட் போட்டுக் கொண்டு மிகவும் நாகரிகமாக தெரியும் அந்த முகத்திலேயே ஒரு வில்லத்தனத்தை வைத்து கொண்டிருப்பார் சரத்குமார்.

புலன் விசாரணை திரைப்படத்தில் இவர் வில்லனாக நடிப்பதற்காக தயாரிப்பாளரை போய் சந்தித்தார். அப்போது அவரை பார்த்து தயாரிப்பாளர் இவருக்கு வாய்ப்பு கொடுக்கலாமா? வேண்டாமா? என்று யோசித்துக் கொண்டிருந்தார்.

அப்பொழுது அவரது முகம் வில்லன் கதாபாத்திரத்திற்கு ஒத்துபோவது போல தெரிந்தது. ஆனால் அவரின் மீசையை எடுத்தால் இன்னும் கொஞ்சம் வில்லதனமாக இருப்பார் என்று யோசித்தார் தயாரிப்பாளர். எனவே அதை பக்கத்தில் இருந்த இயக்குனரிடம் கூறிக் கொண்டிருந்தார். இதனை கேட்ட சரத்குமார் உணவு இடைவேளையின்போது பக்கத்தில் இருக்கும் சலூனிற்கு சென்று மீசையை எடுத்து விட்டு வந்தார்.

அதனை பார்த்து திகைத்து போனார் தயாரிப்பாளர். பொதுவாக ஆண்கள் படத்தில் மீசை எடுக்க சொன்னால் கூட எடுக்க மாட்டார்கள் ஆனால் நீங்கள் நான் பேசியதற்காக எடுத்து விட்டீர்களே என்று அவருக்கு உடனே அந்த படத்தில் வாய்ப்பை கொடுத்துள்ளார். இந்த நிகழ்வை ஒரு பேட்டியில் பகிர்ந்து இருந்தார் சரத்குமார்.

Articles

parle g
madampatty rangaraj
To Top