அந்த ஒரு படம் என் வாழ்க்கையையே மாத்திடுச்சி? – சத்யராஜ் சொன்ன அந்த ஒரு படம் என்ன தெரியுமா?

சத்யராஜ் திரையுலகில் பிரபலமான ஒரு நடிகர் ஆவார். நகைச்சுவை நடிகராக பல படங்களில் கலக்கியுள்ளார் சத்யராஜ். சத்யராஜூம் கவுண்டமணியும் நல்ல நண்பர்கள் ஆவர்.

Social Media Bar

தற்சமயம் பாகுபலி படத்தில் மிகவும் ரெளத்திரமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சத்யராஜ். கட்டப்பா என்றால் இப்போதும் எல்லோருக்கும் சத்யராஜ்தான் நினைவு வரும். ஆரம்ப காலக்கட்டத்தில் சத்யராஜ் அனைத்து படங்களிலும் வில்லனாகதான் நடித்துக்கொண்டிருந்தார்.

வில்லத்தனத்திலேயே ஒரு புதுவகை வில்லத்தனத்தை சத்யராஜ் அறிமுகப்படுத்தினார். அதற்கு இயக்குனர் மணிவண்ணனும் ஒரு காரணம் என கூறலாம். ஆரம்பக்கட்டத்தில் இயக்குனர் மணிரத்னமே சத்யராஜை வளர்த்து விட்டார் என கூறலாம்.

இந்த நிலையில் மணிவண்ணன் இயக்கிய 24 மணிநேரம் என்கிற திரைப்படத்தில் வில்லனாக நடித்தார் சத்யராஜ். அந்த படம்தான் அவரது வாழ்க்கையையே புரட்டி போட்ட திரைப்படம் எனலாம். அந்த படத்தில் கதாநாயகனை விடவும் அந்த வில்லன் கதாபாத்திரம் மிகவும் பிரபலமானது. என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டிரியே என்ற சத்யராஜூன் புகழ்பெற்ற வசனம் முதன் முதலில் இடம் பெற்றது அந்த படத்தில்தான்.

அந்த படத்தின் வெற்றிக்கு பிறகுதான் சத்யராஜூக்கு வரிசையாக கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த விஷயத்தை நடிகர் சத்யராஜே ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.