News
அய்யோ என்ன விட்ருங்க..! ப்ரதீப்பின் பழைய பதிவுகளை தோண்டிய நெட்டிசன்கள்!
தமிழில் தற்போது வெளியாகி பெரும் ஹிட் அடித்துள்ள படம் ‘லவ் டுடே’. இந்த படத்தை எழுதி, இயக்கி, நடித்தும் உள்ளார் ப்ரதீப் ரங்கநாதன். ஜெயம் ரவியை வைத்து ‘கோமாளி’ படத்தை இயக்கிய இவர் தற்போது ஹீரோவாகவும் பெரும் ஹிட் கொடுத்து பிரபலமாகியுள்ளார்.

இந்த பிரபலமே இப்போது ப்ரதீப்புக்கு ப்ராப்ளமாகவும் மாறியுள்ளது. முன்னர் திரை வாய்ப்பு தேடி வந்த சமயத்தில் தனது பேஸ்புக் அக்கவுண்டில் சினிமாவையும், சினிமாக்காரர்களையும் ப்ரதீப் இழுக்காதே வம்பே இல்லை.
அவ்வளவு கிண்டல், கலாய் செய்த மனுஷனின் பழைய பதிவுகளை தோண்டி எடுத்து பலர் வைரலாக்கிவிட்டு பெரும் வேலையை பார்த்துள்ளனர்.
அந்த பழைய பதிவு ஒன்றில் யுவன் சங்கர் ராஜாவின் இசை பற்றி கூட ப்ரதீப் ஏதோ கிண்டல் செய்துள்ளார். ஆனால் அவரது லவ் டுடே படத்திற்கே யுவன் தான் இசையமைத்திருக்கிறார். இப்படியாக பழைய போஸ்ட்டுகளை பலரும் தோண்டு எடுப்பதால் டென்சனாகி தனது அக்கவுண்டையே டீ ஆக்டிவேட் செய்து விட்டாராம் ப்ரதீப்.
