பெண் கல்யாணத்துக்கு காசு இல்லாதப்பக்கூட மற்றவருக்கு உதவிய சாவித்திரி!.. எம்.ஜி.ஆரை மிஞ்சுடுவார் போல!..
Savithri and Sivaji ganesan : நடிப்பில் சிறந்த நடிகராக எப்படி சிவாஜி கணேசன் பார்க்கப் பட்டாரோ அதேபோல நடிகைகளில் ஒரு சிறந்த நடிகையாக பார்க்கப்பட்டவர் நடிகை சாவித்திரி.
தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல வருடங்கள் சாவித்திரி நடிகையாக இருந்து வந்தார். பிறகு அவராகத்தான் சினிமாவை விட்டு விலகினாரே தவிர சினிமா எப்போதுமே சாவித்திரியை கைவிடவில்லை என்று கூறலாம்.

இடையில் மதுவிற்கு அடிமையான சாவித்திரி நடிப்பிலும் ஒழுங்காக ஆர்வம் செலுத்தாமல் கொஞ்ச நாட்களில் சினிமாவை விட்டு விலகிவிட்டார். அதன் பிறகுதான் அவருக்கு வாய்ப்புகள் வருவதிலும் பிரச்சனைகள் ஏற்பட்டன. எம்.ஜி.ஆர்க்கு பிறகு அந்த காலகட்டத்தில் நிறைய மக்களுக்கு உதவி செய்த ஒரு நடிகையாக சாவித்திரி பார்க்கப்படுகிறார்.
சினிமா துறையிலேயே உள்ள கடைநிலை ஊழியர்கள் பலருக்கும் பண உதவி தேவைப்படும் போதெல்லாம் சாவித்திரி கொடுத்து இருக்கிறார். இந்த நிலையில் சாவித்திரியின் மகளுக்கு கல்யாணம் இருந்த பொழுது மிகவும் கஷ்டத்தில் இருந்தார் சாவித்திரி.
அப்போது அவருக்கு அவ்வளவாக சினிமா வாய்ப்புகளும் வராமல் இருந்தன. இந்த நிலையில் சினிமா துறையில் உள்ள தொழிலாளர் ஒருவர் சாவித்திரியிடம் கடன் கேட்டு வந்திருந்தார். அப்பொழுது சாவித்திரி நானே எனது மகள் திருமணத்திற்கு பணம் இல்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன் என்னால் இப்பொழுது யாருக்கும் நிதி கொடுக்க முடியாது என்று கூறி இருக்கிறார்.

அதன் பிறகு ஒரு படத்திற்கான வாய்ப்பு சாவித்திரிக்கு தானாகவே வந்தது அந்த படத்திற்கான அட்வான்ஸ் தொகையையும் சாவித்திரிக்கு கொடுத்தனர். அதை வாங்கிய உடனே அந்த தொழிலாளியை அழைத்த சாவித்திரி அவரிடம் அந்த பணத்தை கொடுத்து விட்டார்.
ஏன் அம்மா என்னிடம் கொடுக்கிறீர்கள் உங்கள் மகள் திருமணத்திற்கு பணம் வேண்டும் என்று கூறினீர்களே என்று கேட்டிருக்கிறார் அந்த நபர். அதற்கு பதில் அளித்த சாவித்திரி இந்த பணத்தை வீட்டுக்கு கொண்டு சென்று விட்டால் கண்டிப்பாக என் மகள் திருமணத்திற்கு அதை எடுத்து வைத்து விடுவேன். அதனால்தான் உன்னை இங்கேயே அழைத்து கொடுக்கிறேன் எனது மகள் திருமணத்தை விடவும் முக்கிய தேவைக்காக தான் நீ கண்டிப்பாக இந்த பணத்தை கேட்டிருப்பாய் எனவே எனது மகள் திருமணத்திற்கு எப்படியும் பணம் வந்துவிடும் என நான் நம்புகிறேன்.
இந்த பணத்தை எடுத்துச் செல் என்று கொடுத்திருக்கிறார் சாவித்திரி இந்த நிகழ்வை சினிமா பிரபலமான சித்ரா லட்சுமணன் தனது காணொளி ஒன்றில் கூறியிருக்கிறார்.