Connect with us

நடுவில் நின்னு செத்துபோ*டாத? விஜய்க்கு பதிலடி கொடுத்த சீமானின் பேச்சு..!

vijay tvk

News

நடுவில் நின்னு செத்துபோ*டாத? விஜய்க்கு பதிலடி கொடுத்த சீமானின் பேச்சு..!

Social Media Bar

சமீபத்தில் தவெக கட்சியின் மாநாடு விக்கிரவாண்டில் நடந்தது. அதில் பேசிய விஜய் நிறைய விஷயங்களை பேசி இருந்தார். மேலும் அதில் நிறைய கட்சிகளையும் வெளிப்படையாக விமர்சித்து பேசியிருந்தார் விஜய்.

அதில் பேசும் பொழுது திமுக குறித்து நிறைய விஷயங்களை பேசி இருந்தார். அதேபோல நாம் தமிழர் கட்சி குறித்தும் பேசியிருந்தார். திமுகவின் திராவிட அரசியல் குறித்தும் நாம் தமிழர் கட்சியின் தமிழ் தேசியவாத அரசியல் குறித்தும் அவர் பேசியிருந்தார்.

அப்படி பேசும் பொழுது திராவிடமும் தமிழ் தேசியமும் என்னுடைய இரண்டு கண்கள். ஆனால் அவற்றை வைத்துக் கொண்டு பிளவுவாத அரசியல் செய்பவர்களைதான் நான் பேசுகிறேனே தவிர அந்த தத்துவங்களை நான் தவறு என்று கூறவில்லை என்று கூறியிருந்தார்.

விஜய் குறித்து சீமான்:

விஜய் இந்த நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் சீமான் சமீபத்தில் பேசியிருந்தார். அதில் பேசிய சீமான் கூறும் பொழுது தமிழ் தேசியமும் திராவிடமும் ஒன்று கிடையாது. பல விஷயங்களை தமிழ் தேசியம் எதிர்த்து நிற்கிறது.

எந்த விஷயத்தை எல்லாம் தமிழ் தேசியம் எதிர்க்கிறதோ அதற்கெல்லாம் ஆதரவாகதான் திராவிட சித்தாந்தம் நிற்கிறது. எனவே அது இரண்டும் ஒன்று கிடையாது.

நான் பிறக்கும் பொழுது எனது எதிரி யார் என்று முடிவு செய்துவிட்டு பிறந்தவன். உங்களை போல ஏசி அறையில் அமர்ந்து போராட்டத்திற்கு வந்தவன் அல்ல. நான் சிறையில் இருந்து விட்டு வந்தவன் என்று பேசி இருந்தார் சீமான்.

மேலும் ஏதாவது ஒரு கருத்துக்கு ஆதரவாக நிற்க வேண்டும் அதை விட்டுட்டு சாலையின் இந்த மூலையிலும் இல்லாமல் அந்த மூலையிலும் இல்லாமல் நடுவில் நின்றால் அடிபட்டு தான் சாக வேண்டும் என்று வெளிப்படையாக விஜய்யை திட்டி இருந்தார் சீமான். சீமானின் இந்த பேச்சு இப்பொழுது வைரலாக துவங்கி இருக்கிறது.

To Top