News
நாயை விட மோசமானவங்க மனுசங்க!.. நடிகை சந்தியாவிற்கு நடந்த கொடுமை…
சினிமா எப்போதுமே நடிகைகளுக்கு நல்ல நினைவுகளை கொடுத்ததில்லை. எப்போதும் சினிமாவிற்கு செல்லும் பெண்கள் பாதுக்காப்பற்ற நிலையிலேயே இருக்கின்றனர். எவ்வளவோ நடிகைகள் தங்களுக்கு நடந்த பாலியல் கொடுமைகளை வெளிப்படையாக பேசியுள்ளனர்.
கவிஞர் வைரமுத்து மாதிரியான பெரிய பிரபலங்கள் மீது கூட இப்படியான குற்றச்சாட்டுகள் உள்ளன. இப்படி இருக்கையில் சீரியல் நடிகைகளுக்கு மட்டும் எப்படி இதில் விதிவிலக்கு இருக்கும். நடிகை சந்தியா பல காலங்களாக சீரியலில் நடிகையாக இருந்து வந்தவர்.
சன் டிவியில் அத்திப்பூக்கள் வம்சம் போன்ற நாடகங்களில் இவரை பார்த்திருக்கலாம். தற்சமயம் இவர் விலங்கு ஆர்வலராக மாறியுள்ளார். தெரு நாய்களுக்கு அடைக்கலம் கொடுத்து வருகிறார். இவரிடம் தெரு நாய்கள் கடிக்கின்றன,மோசமானவை என கூறுகிறார்களே என கேட்டப்போது அவருக்கு நடந்த அனுபவம் ஒன்றை கூறினார்.
ஒருமுறை கும்பகோணத்திற்கு ஒரு படப்பிடிப்பிற்காக சென்றிருந்தார் சந்தியா. அங்கு யானை அவருக்கு மாலை போடுவது போன்ற காட்சி படமாக்கப்பட்டு கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த யானை தனது தும்பிகையால் சந்தியாவை தாக்கிவிட்டது. இதனால் அவரது முதுகு எலும்பு உடைந்துவிட்டது. உடனே 10 பேர் சேர்ந்து அவரை தூக்கி கொண்டு ஆம்புலன்ஸிற்கு சென்றனர்.
அப்போது தூக்கியிருந்த ஒரு நபர் சந்தியாவின் மார்பகத்தை அழுத்தியுள்ளார். இந்த விஷயத்தை பகிர்ந்த சந்தியா கூறும்போது எனக்கு அந்த யானை செய்தது கூட பெரிய வலியை தரவில்லை. அந்த நபர் செய்ததுதான் அதிக மன வலியை கொடுத்தது. எனவே விலங்குகள் எனக்கு மனிதனை விட மேம்பட்டதாகதான் தெரிகிறது என கூறுகிறார் சந்தியா.
