Friday, June 12, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
இது மறக்குமா நெஞ்சம் பார்ட் 2? ஹரிஹரன் கான்செர்ட்டுக்குள் நுழைந்த ரசிகர்களுக்கு பலத்த அடி, அடப்பாவமே

இது மறக்குமா நெஞ்சம் பார்ட் 2? ஹரிஹரன் கான்செர்ட்டுக்குள் நுழைந்த ரசிகர்களுக்கு பலத்த அடி, அடப்பாவமே

by Arun
February 10, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

கடந்த வருடம் சென்னையில் நடைபெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் “மறக்குமா நெஞ்சம்” கான்செர்ட்டை யாராலும் மறந்திருக்க முடியாது. நிர்வாகத்தின் குறைபாடு காரணமாக ஏ.ஆர்.ரஹ்மான் கான்செர்ட்டிற்கு அதிக கட்டணம் கொடுத்து டிக்கெட் எடுத்து வந்திருந்தவர்கள் கூட மன உளைச்சலுடன் வீடு திரும்பினார்கள்.

சமூக வலைத்தளங்களில் ஏ.ஆர்.ரஹ்மானை ரசிகர்கள் பலரும் மிகக் கடுமையாக விமர்சித்தனர். அதன் பின் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ரசிகர்களிடம் குறைபாடுகளை காரணம் காட்டி மன்னிப்பும் கேட்ட செய்தியை நாம் பார்த்திருப்போம்.

இதனை தொடர்ந்து தற்போது பிரபல பாடகரான ஹரிஹரனின் கான்செர்ட் பேசுப்பொருளாக மாறியிருக்கிறது. அதாவது நேற்று இரவு இலங்கையின் ஜாஃப்னா பகுதியில் உள்ள முட்டவேலி அரங்கத்தில் ஹரிஹரனின் கான்செர்ட் நடைபெற்றது.

இதில் ரம்பா, தமன்னா, யோகி பாபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மிர்ச்சி சிவா, சாண்டி மாஸ்டர், கலா மாஸ்டர் போன்ற சினிமா பிரபலங்களுடன் KPY பாலா, குக் வித் கோமாளி புகழ், மைனா போன்ற பல சின்னத்திரை நட்சத்திரங்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். இதனால் அந்த அரங்கமே விழாக்கோலம் போல் காட்சித் தந்தது.

கான்செர்ட் தொடங்கியபோது ரசிகர்கள் பலரும் அரங்கத்திற்குள் கூட்டம் கூட்டமாக குவியத் தொடங்கினர். இதில் பாதுகாப்பையும் மீறி அதிக அளவில் ரசிகர்கள் கூட்டம் குவிந்ததால் அங்கே தள்ளுமுள்ளு ஏற்பட்டு பலருக்கும் பலத்த காயம் ஏற்பட்டதாக செய்திகள் வெளிவருகின்றன.

ஹரிஹரன் லைவ் இன் கான்செர்ட் மற்றும் ஸ்டார் நைட் என்று பெயரிடப்பட்ட இந்த கான்செர்ட்டிற்கு இருபத்தி ஐந்தாயிரம், ஏழாயிரம், மூவாயிரம் போன்ற வெவ்வேறு கட்டணங்களை நிர்ணயித்திருந்தனர். அதே போல் Free Entryயும் இருந்திருக்கிறது.

இந்த நிலையில் கான்செர்ட்டிற்கு அதிகளவில் கூடிய ரசிகர்கள் பேரிகார்டுகளையும் மீறி கூட்டம் கூட்டமாக உள்ளே நுழைந்திருக்கின்றனர். ஆதலால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பலருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டிருக்கிறது.

ரசிகர்களிடையே கூட்ட நெரிசல் காரணமாக தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார்கள் ரசிகர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தினர். இந்த சம்பவம் இலங்கை ஜாஃப்னாவில் மிகவும் பரபரப்பான சம்பவமாக ஆகிப்போனது. ஏ.ஆர்.ரஹ்மானின் “மறக்குமா நெஞ்சம்” கான்செர்ட்டிற்கு அடுத்தபடியாக ஹரிஹரனின் கான்செர்ட் ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது.

Tags: ar rahmanhariharanKollywoodMarakuma Nenjamtamil cinemaஏ ஆர் ரஹ்மான்கோலிவுட்தமிழ் சினிமாமறக்குமா நெஞ்சம்ஹரிஹரன்
Previous Post

இது என்ன பாகவதர் படமா? இம்புட்டு நீளமா எடுத்து வச்சிருக்காய்ங்க- லவ்வர் படத்தை பங்கமாய் கலாய்த்த புளூ சட்டை மாறன்

Next Post

சிவகார்த்திகேயன் காட்டுல இனி அடைமழைதான், அந்த மாஸ் ஹீரோ பட இயக்குனரையே வளைச்சிப்போட்டாரே, SK 25 பட டைரக்டர் இவர்தானாம்?

Related Posts

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

May 29, 2026
Next Post
சிவகார்த்திகேயன் காட்டுல இனி அடைமழைதான், அந்த மாஸ் ஹீரோ பட இயக்குனரையே வளைச்சிப்போட்டாரே, SK 25 பட டைரக்டர் இவர்தானாம்?

சிவகார்த்திகேயன் காட்டுல இனி அடைமழைதான், அந்த மாஸ் ஹீரோ பட இயக்குனரையே வளைச்சிப்போட்டாரே, SK 25 பட டைரக்டர் இவர்தானாம்?

Recent Updates

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026
விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved