Connect with us

என் போனில் இருந்து தப்பு தப்பா மெசேஜ் பண்ணிட்டாங்க!.. சிம்பு நயன்தாராவால் நடிகையிடம் சிக்கிய தயாரிப்பாளர்!..

nayanthara simbu

Cinema History

என் போனில் இருந்து தப்பு தப்பா மெசேஜ் பண்ணிட்டாங்க!.. சிம்பு நயன்தாராவால் நடிகையிடம் சிக்கிய தயாரிப்பாளர்!..

Social Media Bar

Actor simbu and Nayanthara: தமிழ் சினிமாவில் எப்போதுமே காதல் கதைகளுக்கு பஞ்சமே கிடையாது. ஒரே துறையில் இருப்பதால் நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும் இடையே எப்போதும் காதல் கதை என்பது ஓடி கொண்டேதான் இருக்கும்.

அப்படி தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த காதல் கதைகளில் ஒன்றுதான் சிம்பு நயன்தாராவின் காதல் கதை. வல்லவன் திரைப்படம் வெளியான சமயத்தில் சிம்பு மற்றும் நயன்தாரா இருவரும் காதலித்து வந்தனர். ஆனால் அதன் பிறகு அவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.

அதன் பிறகு நடிகர் பிரபுதேவாவை காதலித்த நயன் தாராவிற்கு அதுவுமே தோல்வியில் சென்று முடிந்தது. இந்த நிலையில்தான் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் அவருக்கு காதல் ஏற்பட்டது. வெகு நாட்களாக சென்ற இந்த காதல் பிறகு திருமணத்தில் முடிந்துள்ளது.

simbu
simbu

ஆனால் சிம்புவை பொறுத்தவரை திருமணம் செய்துக்கொள்ளாமல் வாழ்வதே சிறந்தது என முடிவெடுத்துவிட்டார். எனவே இப்போது வரை சிங்கிளாகவே இருந்து வருகிறார் சிம்பு. இந்த நிலையில் இவர்கள் இருவருடம் படம் தயாரித்த தயாரிப்பாளர் பி.எல் தேனப்பன் ஒரு பேட்டியில் பேசும்போது இவர்கள் செய்யும் சேட்டைகளை கூறியுள்ளார்.

காமெடிக்காக விபரீத விஷயங்களை எல்லாம் சிம்புவும் நயன்தாராவும் செய்துள்ளனர். ஒருமுறை பி.எல் தேனப்பன் போனை எடுத்து நடிகை கோபிகாவிற்கு ஐ லவ் யு என மெசேஜ் அனுப்பிவிட்டனர். இதனால் கோபமான கோபிகா தயாரிப்பாளருக்கு போன் செய்து என்ன சார் இப்படி மெசேஜ் அனுப்பியுள்ளீர்கள் என கேட்டிருந்தார்.

எதுவும் புரியாமல் போனை பார்த்த தயாரிப்பாளருக்கு பிறகுதான் விஷயம் தெரிந்துள்ளது. இதனை தொடர்ந்து கோபிகாவிற்கு போன் செய்து விஷயத்தை கூறியுள்ளார் தயாரிப்பாளர்.

To Top